உள்துறை அமைச்சகம்

ஆசியாவின் மிகப்பெரிய ‘ 750 மெகாவாட் ரேவா சூரியசக்தித் திட்டத்தை’ நாட்டுக்கு அர்பணித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா நன்றி தெரிவித்தார்.

Posted On: 10 JUL 2020 4:16PM by PIB Chennai

ஆசியாவின் மிகப்பெரிய ‘ 750 மெகாவாட் ரேவா சூரியசக்தி திட்டத்தைநாட்டுக்கு அர்பணித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

திரு.அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த முக்கியமான எதிர்காலத்துக்குப் பயனளிக்கும் திட்டம் , மோடி அரசின் சுயசார்பு இந்தியா தொலைநோக்கை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை ரேவா சூரியசக்தித் திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ள ‘ 750 மெகாவாட் ரேவா சூரியசக்தித் திட்டம்வருங்காலத்தில் இந்தியாவை எரிசக்திப் பாதுகாப்பில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கும் முயற்சியில்  மேலும் ஒரு படியாகும். 2015  நவம்பர் 30-ஆம் தேதி , பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டின் 21-வது அமர்வில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, சர்வதேச சூரியசக்திக் கூட்டணியை தொடங்கி வைத்தார்.

*****


(Release ID: 1637795) Visitor Counter : 190