பாதுகாப்பு அமைச்சகம்

திருமணமாகாத மாற்றுத்திறனாளி மகன்கள், 25 வயதுக்கு பிறகும் முன்னாள் ராணுவ வீரர் சுகாதாரத் திட்டத்தில் பலன் பெறலாம்

Posted On: 08 JUL 2020 12:52PM by PIB Chennai

முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிக்கும் சுகாதாரத் திட்டத்தில் (ஈசிஎச்எஸ்), முன்னாள் ராணுவ வீரரை பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும், திருமணமாகாத மாற்றுத் திறனாளி மகன்கள் 25 வயது வரை மட்டுமே பலன் பெற முடியும் என்ற விதி இதுவரை இருந்து வந்தது.

மத்திய அரசின் சுகாதாரத் திட்ட விதிகளின்(சிஜிஎச்எஸ்)படி, ஈசிஎச்எஸ் மேற்குறிப்பிட்ட விதியை இதுவரை கடைபிடித்து வந்தது. தற்போது சிஜிஎச்எஸ் இந்த விதியை மாற்றியமைத்துள்ளது. 25 வயதுக்குப் பிறகு ஊனமடைந்த மத்திய அரசுப் பணியாளரின் மகன்கள், அவரை சார்ந்திருப்பவர்களாகவே கருதப்பட்டு சிஜிஎச்எஸ் திட்டப் பயன்களை பெற முடியும் என்று 2020 ஜனவரி 1-ந் தேதி புதிய ஆணையை அரசு பிறப்பித்துள்ளது.

இதனால் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையும், 25 வயதுக்கு பிறகு ஊனமடையும் ராணுவ வீரரின் மகன்கள் அவரை சார்ந்திருப்பவராகவே கருதப்படுவார்கள் என்றும், ஈசிஎச்எஸ் திட்டப் பயன்களை பெற தகுதியுடையவர்கள் என்றும் ஈசிஎச்எஸ் விதியை மாற்றியமைத்துள்ளது.

*****



(Release ID: 1637172) Visitor Counter : 214