உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, சுவாமி விவேகானந்தருக்கு அவருடைய மறைந்த தினத்தில் அஞ்சலி செலுத்தினார்

Posted On: 04 JUL 2020 1:59PM by PIB Chennai

சுவாமி விவேகானந்தர் ஒரு தேசபக்த துறவி, சிறந்த சிந்தனையாளர் மற்றும் முன்மாதிரியான சொற்பொழிவாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா புகழாரம் சூட்டியதுடன், அவர் இந்தியாவில் தேசியவாத உணர்வை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், உலகம் முழுவதையும் இந்திய கலாச்சாரத்தின் நெறிமுறைகளால் வளப்படுத்தினார். சுவாமி விவேகானந்தர் மறைந்த தினமான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்திய திரு அமித்ஷா, ஒரு சுட்டுரையில், “கல்வி குறித்த எண்ணங்கள், உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் சுய விழிப்புணர்வு பற்றிய சுவாமி விவேகானந்தரின் பேச்சுகள் இன்றளவும் யாராலும் மறுக்க முடியாமல் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் “சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் இளைஞர் சக்தியின் திறன்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்” என்றார். அது மட்டுமன்றி வரவிருக்கும் காலங்களில் இளைஞர்களால் மட்டுமே சரியான திசையைக் காட்டவும், தேசத்தை மேம்படுத்தவும் முடியும் என்று அவர் நம்பினார், ” இன்றும் கூட, சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளும் அவரின் இலட்சியக் கருத்துகளும் இளைஞர்களை தேசத்தின் சேவையை நோக்கி நகர ஊக்கமளிக்கிறது " என்று கூறினார்.  மேலும் இந்தப் புனித நாளில் அவர் முன்னால் தலை வணங்குகிறேன்" என்றார் திரு.அமித்ஷா.

********



(Release ID: 1636390) Visitor Counter : 113