கலாசாரத்துறை அமைச்சகம்

இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் கீழ் மையப் பாதுகாப்பிலுள்ள, வழிபாட்டுத்தலங்கள் கொண்ட அனைத்து நினைவிடங்களும் ஜுலை 6 முதல் திறக்கப்படும்: திரு பிரகலாத் சிங் படேல்.

Posted On: 03 JUL 2020 4:49PM by PIB Chennai

இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (Archaeological Survey of India - ASI) அமைப்பின் கீழ் மையப் பாதுகாப்பில் உள்ள அனைத்து நினைவிடங்களையும், அனைத்துப் பாதுகாப்பு நிபந்தனைகளையும் முழுமையாகப் பின்பற்றி, ஜூலை 6 முதல் திறக்க, மத்திய கலாச்சாரத்துறை இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் அறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவை வெளியிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் இந்த நினைவிடங்களில் பின்பற்றப்படும் என்றும் திரு. படேல் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் இல்லாத நினைவிடங்களுக்குள் மட்டுமே பாரவையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். சுத்திகரிப்பான்களால் தூய்மைப்படுத்துவது; சமூக விலகியிருத்தல்; ஆகியவை உட்பட, கோவிட் 19 நோய் பரவாமல் தடுப்பதற்கு பின்பற்றப்பட வேண்டியவை குறித்து மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் வெளியிட்டுள்ள அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதை இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் நினைவிடங்களும், தலங்களும் உறுதி செய்ய வேண்டும்.

அந்தந்த மாநிலங்கள்/ மாவட்ட நிர்வாகங்கள் ஆகியவை வெளியிட்டுள்ள மாநில/ மாவட்ட அளவிலான ஆணைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

கோவிட்19 பெருந்தொற்றை அடுத்து, இந்த நினைவிடங்கள் மூடப்பட்டிருந்தன. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் மையப் பாதுகாப்பில் உள்ள, 3691 நினைவிடங்களில், வழிபாட்டுத்தலங்கள் கொண்ட 820 நினைவிடங்கள் 8 ஜூன் 2020 அன்று திறக்கப்பட்டன.  

 

*******


(Release ID: 1636279) Visitor Counter : 237