அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய புவி-ஆராய்ச்சி அறிஞர்கள் கூட்டத்தில் பங்கேற்ற புவி-ஆராய்ச்சி அறிஞர்கள், சமுதாயத்திற்கு புவி அறிவியலின் பலன் பற்றி விவாதம்

Posted On: 29 JUN 2020 12:50PM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி அமைப்பான, டேராடூனில் உள்ள வாடியா இமயமலை புவி ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்திருந்த,  புவி-ஆராய்ச்சி அறிஞர்களின் 4-வது தேசிய மாநாடு இணையவழியில் நடைபெற்றது.  இயற்கை வளங்கள்,  நீர் மேலாண்மை, நிலநடுக்கம், பருவமழை, பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்,  நதிகளின் போக்கு உள்ளிட்ட சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடிய புவி-அறிவியல் குறித்த இணையவழி கருத்தரங்கில், புவி ஆராய்ச்சி அறிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

தொடக்க உரையாற்றிய,  கருத்தரங்கின் புரவலரும், சிறப்பு விருந்தினருமான மத்திய அறிவியல்-தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா, தண்ணீர் ஊற்றுகளை மதிப்பிடுதல், , கட்டடப் பொறியாளர்களுக்கான புவிஅறிவியல்,  பயிர்கள் மற்றும் தண்ணீர் பற்றிய, பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகள்,  பல்வேறு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல்,  விவசாயத்திற்கு சூரியசக்தி மின்சாரப் பயன்பாடு, மற்றும் நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட புவி-ஆராய்ச்சியின் பல்வேறு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.  

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் 20 பேர் உட்பட, பல்வேறு அறிஞர்கள் பங்கேற்ற இந்த இரண்டு நாள் இணையவழி கருத்தரங்கு, கடந்தவாரம் நடைபெற்றது.

*****



(Release ID: 1635111) Visitor Counter : 162