குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

வாரணாசியில் ”சுதேசி மட்டும்” என்ற புதிய அடையாளத்துடன் 80 மண்பாண்டம் செய்யும் குடும்பங்களுக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அதிகாரம் அளித்துள்ளது

Posted On: 27 JUN 2020 5:54PM by PIB Chennai

பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள மண்பாண்டம் செய்யும் சமூகம் இந்த திருவிழா காலத்தில் சுதேசி மட்டும் என்ற அடையாளத்துடன் தங்களது மண்பாண்டங்களை விற்க முன்வந்ததன் மூலம் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறதுகதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வாரணாசியில் உள்ள மண்பாண்டம் செய்பவர்களுக்கு மண் விளக்குகள், தெய்வச் சிலைகள் மற்றும் இதர மண்பாண்டங்களைச் செய்வதற்கு சுயசார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் பயிற்சி அளித்து வருகிறது.

இட்டாரெடி, அஹ்ரூர்ரெடி, அர்ஜுன்பூர் மற்றும் சக்சாஷன்கிகாஜ் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த  மண்பாண்டங்கள் செய்யும் 80 குடும்பங்களுக்கு மின்சாரத்தினால் இயங்கும் மண்பாண்டம் வனையும் சக்கரங்களை இன்று கே.வி..சியின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா வழங்கினார்இந்த ஒவ்வொரு கிராமங்களிலும் 150 முதல் 200 மண்பாண்டங்கள் செய்யும் குடும்பங்கள் உள்ளனஇவர்கள் தலைமுறை தலைமுறையாக மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்கையால் சுற்றி மண்பாண்டங்களை வனையும் சக்கரம் போன்ற பழைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், களிமண்ணைப் பிசைவதற்கு கடுமையான உடல் உழைப்பு தேவைப்படுதல் மற்றும் உற்பத்தி செய்த மண்பாண்டங்களை விற்பதற்கான ஆதரவு இல்லாதது ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான மாற்று வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்வாரணாசியில் அடுத்த மூன்று மாதங்களுக்கு 1500 பண்டம் வனையும் சக்கரங்களை விநியோகிக்க கே.வி..சி இலக்கு நிர்ணயித்து உள்ளது.

வாரணாசியில் சேவாபுரி கிராமத்தில் கோவிட் பெருந்தொற்று ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து திரும்பி வந்துள்ள 300 புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு 300 மின்சாரத்தினால் இயங்கும் மண்பாண்டம் வனையும் சக்கரங்களையும் இதர உபகணங்களையும் வழங்குவற்கும் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளதுகதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஏற்கனவே 60 புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு பயிற்சி அளித்துள்ளதுஅடுத்த மாதம் 300 குடும்பங்களுக்கு மண்பாண்டங்கள் செய்வதற்கான கருவிகளின் தொகுப்பு வழங்கப்படும்இந்த நடவடிக்கைகள் வாரணாசியில் மட்டுமே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சுமார் 1200 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதுமனவேதனையுடன் திரும்பி வந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பை உருவாக்குவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் ஆகும்அப்போதுதான் அவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி மீண்டும் பிற நகரங்களுக்கு குடிபெயரும் தேவை இல்லாமல் இருப்பார்கள்

கும்ஹார், சஷாக்டிக்ரான் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பழைய பயனாளிகளும் காணொளிக் காட்சி மூலம் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவருடன் இந்தத் தருணத்தில் உரையாடினர்கும்ஹார், சஷாக்டிக்ரான் திட்டத்தின் கீழ் கே.வி..சி இடம் இருந்து மண்பாண்டம் வனையும் மின்சார சக்கரத்தை பெற்று மண்பாண்டத் தொழில் செய்யும் கிஷன் பிரஜாபதி மின்சார சக்கரம் கிடைத்தப் பிறகு வாரணாசி கண்டோன்ட்மண்ட் ரெயில் நிலையத்தில் தினமும் சுமார் 3,000 களிமண் குவளைகளை விற்பதாக தெரிவித்தார். இத் திட்டத்தின் மற்றொரு பயனாளியான அக்ஷய் குமார் பிரஜாபதி மிர்சாபூர் மாவட்டத்தில் சூனா மார்க்கெட்டில் சுமார் 4,000 களிமண் குவளை மற்றும் தட்டுகளை விற்பதாகவும் பொருளாதார ரீதியாக இப்பொழுது தனித்து நிற்க முடிவதாகவும் தெரிவித்தார். மற்றொரு மண்பாண்டத் தொழிலாளியான தயாசங்கர் பிரஜாபதி வாரணாசியில் மந்துவாடி ரெயில் நிலையத்தில் பால் அருந்தத் தரப்படும் மண்ணாலான டம்ளர்கள் சுமார் 3,500 விற்பதன் மூலம் வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை நல்ல முறையில் ஈட்டுவதாகத் தெரிவித்தார்களிமண் குவளைகளை விற்பதன் மூலம் மாதத்திற்கு ரூபாய் 20,000 வரை வருமானம் ஈட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்

நிதி ஆயோக் வாரணாசியை ஒரு ஆஸ்பைரேஷனல் மாவட்டமாக அடையாளம் கண்டுள்ளதுகாதி மற்றும் கிராமத் தொழில்களை அபிவிருத்தி செய்வதற்காக முன்னுரிமை அடிப்படையில் சேவாபுரியை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் தேர்ந்தெடுத்துள்ளதுகைவினைக் கலைஞர்களுக்கு மண்பாண்டம் செய்வதில் பயிற்சி அளித்து ஊக்கம் அளிக்கப்படுகிறதுகதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இதுவரை நாடு முழுவதும் 17,000க்கும் மேற்பட்ட மண்பாண்டம் வனையும் மின்சார சக்கரங்களை விநியோகித்துள்ளது.


(Release ID: 1634844) Visitor Counter : 317