கலாசாரத்துறை அமைச்சகம்

பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதையடுத்து, 28 ஜூன் முதல் 12 ஜூலை 2020 வரை மரக் கன்றுகள் நட்டு, ‘சங்கல்ப பர்வா’ கொண்டாட மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

Posted On: 27 JUN 2020 4:38PM by PIB Chennai

நாட்டில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி,  தூய்மையை உறுதிப்படுத்துவதற்காக அலுவலக வளாகங்கள் அல்லது எங்கு இடம் உள்ளதோ அங்கு, குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகளை நடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளது போல, மரக்கன்றுகள் நடுவதற்காக சங்கல்ப

பர்வா திட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கூறியுள்ளார்.

 

 

28 ஜூன் முதல் 12 ஜூலை 2020 வரை சங்கல் பர்வா கொண்டாட தமது அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக திரு.படேல் கூறினார். தமது அமைச்சகத்தின் கீழான அனைத்து அலுவலகங்களும், அகாடமிக்களும், இணை அமைப்புகளும், சார்பு அமைப்புகளும் அந்தந்த அலுவலக வளாகங்கள் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், எங்கு வாய்ப்பு உள்ளதோ அங்கு மரக்கன்றுகளை நடும் என்று அமைச்சகம் எதிர்பார்க்கிறது. பிரதமரால் அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து வகையான மரங்கள் நம் நாட்டின் மூலிகைப் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த மரங்கள்  (i) “ஆலமரம்” (ii) “Awla” “நெல்லி (iii) “அரசமரம்” (iv) “அசோகா மரம்” (v) “வில்வமரம்”.

இந்த வகை மரக்கன்றுகள் கிடைக்காவிட்டால் மக்கள் தங்கள் விருப்பப்படி வேறு எந்த மரக்கன்றுகளை வேண்டுமானாலும் நடலாம் என்று அமைச்சர் கூறினார். பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப நடப்படும் இந்த ஐந்து மரக்கன்றுகள் தவிர, ஒவ்வொரு அமைப்பும் தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் தங்கள் விருப்பப்படி, ஏதாவது ஒரு மரக்கன்றை நட வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் திரு படேல் கூறினார். தாங்கள் நட்டு வைக்கும் மரக்கன்றுகளை நன்கு வளரும் வகையில் ஊழியர்கள் ஓராண்டு காலத்திற்குப் பராமரிக்க வேண்டும் என்பதையும், அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்

 

சங்கல்ப: பர்வா இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று அதற்கான புகைப்படங்களை மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் #संकल्पपर्व #SankalpParv பகிர்ந்து கொள்ளுமாறு திரு படேல் கேட்டுக் கொண்டுள்ளார். பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டதால், மரக்கன்றுகளை நடுவதற்கு இதுவே சரியான தருணம் என்று அவர் கூறினார். இந்தப் பெருந்தொற்று காலத்தில் சுகாதாரமான சுற்றுச்சூழலும் , தூய்மையும் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம் என்றும், இந்தப் பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பாக நம் வாழ்க்கையை நடத்திச் செல்ல உதவும் வகையில், நமது மூலிகைச் செல்வங்கள் நமக்கு போதுமான வலு அளித்துள்ளன என்பது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த சங்கல்ப பர்வா இயக்கத்தில் அனைவரும் கலந்து கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றையாவது நட்டு ஒரு செடியையாவது பாதுகாத்து வளர்த்து, சுகாதாரம் மிகுந்த சுற்றுச்சூழல் கொண்ட, செழிப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



(Release ID: 1634809) Visitor Counter : 234