பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

நாடு முழுவதும் உள்ள பிரபலமான ஆயுஷ் வல்லுநர்களின் மெய்நிகர் கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் உரை.

Posted On: 23 JUN 2020 8:07PM by PIB Chennai

ஒருங்கிணைந்த மருத்துவ மேலாண்மையின் சிறப்பான அவசியத்தை கொவிட் பெருந்தொற்று நமக்கு காட்டியுள்ளது என்றும், இந்த விஷயத்தில் அதிக மருத்துவத் தடுப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் தீவிர சிந்தனை அவசியம் என்ற நிலை வரும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

இந்தியாவின் பிரபலமான ஆயுஷ் வல்லுநர்கள் சிலருடனான மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜித்தேந்திர சிங், ஒருங்கிணைந்த அல்லது முழுமையான மேலாண்மைத் தேவை என உணர்ந்துள்ள போதிலும், தொற்றா நோய்கள், நீரிழிவு போன்ற நோய்கள் விஷயத்தில் தேவையான பெரும் கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறினார். இந்த நோயாளிகளுக்கு இன்சுலின், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் அளிக்கப்படும் அதேநேரத்தில், யோகா, இயற்கை வைத்தியம் ஆகிய இதர முறைகளையும் மேற்கொண்டால், , ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மருந்துகள் குறைக்கப்பட வாய்ப்பு  ஏற்படும் என்பது போதிய ஆதாரங்கள், ஆராய்ச்சி குறிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த மெய்நிகர் கூட்டத்தில், டாக்டர் நாகேந்திர ஆச்சார்யா, 60 வயதுக்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் என பல்வேறு பிரிவினருக்கு உரிய யோகா பயிற்சிக்கான புதிய விதிமுறைகளை வீடியோ காட்சி மூலம் விளக்கினார். இந்த முழு பயிற்சியையும் 15 நிமிட நேரத்திற்குள்  மேற்கொள்ள முடியும்


(Release ID: 1633878) Visitor Counter : 213