வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

மத்திய அரசு குடியிருப்பை காலி செய்ய மேலும் கால அவகாசம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2020 5:59PM by PIB Chennai

ஜெனரல் பூல் ரெசிடென்சியல் அகாமாடேசன்’ கீழ் ஒதுக்கப்பட்டுள்ள மத்திய அரசுக் குடியிருப்புகளை, தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலத்திற்கும் கூடுதலாக தக்க வைத்திருப்பவர்கள், காலி செய்வதற்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், மேலும் 15 நாள் அவகாசம் அளித்துள்ளது. அதாவது, குடியிருப்பை காலி செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொவிட்-19 பெருந்தொற்றால், மாற்று வீடு கிடைப்பதும், வீடு மாற்றுவதற்கு உதவக் கூடிய தொழிலாளர்கள் கிடைப்பதும் கடினமாக இருப்பதாகவும், கால நீடிப்பு தரவேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்ததால் அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1633759) வருகையாளர் எண்ணிக்கை : 231
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri