தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஊரடங்கின் போது இரண்டு கோடி கட்டிட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.4,597 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

Posted On: 23 JUN 2020 12:26PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை 24 மார்ச், 2020 தேதியிட்டு அனுப்பிய கடிதத்தின்படிஊரடங்கின் போதுநாடு முழுவதும் உள்ள பதிவுபெற்ற சுமார் இரண்டு கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, மாநில அரசுகள், இதுவரை சுமார் ரூ.4,957 கோடியை ரொக்க உதவியாக வழங்கியுள்ளனஇதில், சுமார் 1,75 கோடி பரிமாற்றங்கள்நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில்  நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதுபண உதவி தவிர, சில மாநிலங்கள், ஒவ்வொரு தொழிலாளருக்கும்  சுமார் ரூ.1,000 முதல் ரூ.6,000 வரையிலான  உதவிகளையும் ஊரடங்கின்போது வழங்கியுள்ளனவேறு சில மாநிலங்கள், உணவுப் பொருள்கள் மற்றும் ரேஷன் பொருள்களையும் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளன.  

கோவிட்-19 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சவாலான காலகட்டத்தில்மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, மாநில அரசுகள் மற்றும் மாநில நல வாரியங்களுடன் இணைந்து,   கட்டுமானத் தொழிலாளர் நலன் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, நிதியுதவிகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்தது

இந்தியாவில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின்கட்டிட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள்மிகவும் பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர்களாக உள்ளனர்எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில்மோசமான சூழலில் பணியாற்றி வருகின்றனர்.   இவர்களில் பெரும்பாலானோர்புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகவும்தங்களது சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பணிபுரியக் கூடியவர்களாகவும் உள்ளனர்தேச வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கும் போதிலும்சமுதாயத்தின் விளிம்பு நிலையிலேயே உள்ளனர்

தொழிலாளல் நலச் சட்ட விதி 22(1) (h)-இன்படிதொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில், நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் , போதுமான நிதியை வழங்குமாறுமத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர், 24 மார்ச், 2020 அன்று, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிய ஆலோசனைக் கடிதத்தை, உரிய நேரத்தில் அனுப்பியிருந்தார்.   தொழிலாளர்கள் உயிர்வாழத் தேவையான  அளவிற்கு, எவ்வளவு நிதியை வழங்கலாம் என்பதை, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுகட்டுமானத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பண நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவும் நோக்கில், இந்த ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.   இதேபோன்ற ஒரு கடிதத்தை, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலாளரும், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் எழுதியதோடு, அவ்வப்போது காணொளிக் காட்சி மூலமும், இந்த ஆலோசனை பின்பற்றப்படுவதை கண்காணித்து வந்தார்.       

*****


(Release ID: 1633624) Visitor Counter : 327