மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழுமம் ஆன்லைனில் யோகா வினாடி வினாப் போட்டியைத் தொடங்கியுள்ளது


பள்ளிப் பாடத்திட்டத்திலேயே யோகாவை ஒருங்கிணைப்பதை ஊக்குவிப்பதற்கான போட்டி

Posted On: 21 JUN 2020 6:08PM by PIB Chennai

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிப் பாடத்திட்டத்தில் யோகாவை ஒருங்கிணைக்கும் பணியை மேம்படுத்துவதற்காக பலவிதமான முன்னெடுப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (NCERT) வழியாக மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் வீட்டிலிருந்து கொண்டே கற்றுக்கொள்ளவும் பாதுகாப்பாக இருக்கவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் ஏற்பாடு செய்துள்ள ஆன்லைன் யோகா வினாடிவினாப் போட்டியை சமூக ஊடகங்கள் வாயிலாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க்தொடங்கி வைத்தார்.

இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்வேறு யோகப் பயிற்சிகள் குறித்த விரிவான தகவல்களை நம்பகமான ஆதாரங்களிலிருந்து மாணவர்கள் பெறுவதற்கு உதவுவதும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்தப் போட்டியின் நோக்கமாகும்  என்று குறிப்பிட்டார்.

 

யோகா வினாடி வினாப் போட்டியானது யோகாவின் பல்வேறு பரிமாணங்களின் அடிப்படையில் அமையும் என்று திரு.பொக்ரியால் குறிப்பிட்டார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் உருவாக்கியுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் யாமம் மற்றும் நியமம் ஷத்கர்மா, கிரியா ஆசனங்கள் பிராணாயாமம், தியானம், பாந்தா மற்றும் முத்ரா ஆகியவை குறித்து போட்டியில் கேள்விகள் இடம் பெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில்  21 ஜுன் தொடங்கி 20 ஜுலை 2020 நள்ளிரவு வரை பங்கேற்கலாம். வினாடி வினாப் போட்டியில் பங்கு பெறுவதற்கான இணைப்பு இங்கே  தரப்பட்டுள்ளது:

ஆங்கில வினாடி வினா: https://bit.ly/EYQ_NEWS

ஹிந்தி வினாடி வினா: ` https://bit.ly/HYQ_NEWS



(Release ID: 1633283) Visitor Counter : 210