ரெயில்வே அமைச்சகம்

கொவிட்-19 கவனிப்பு மையங்களாக மாற்றப்பட்ட 960 ரயில்பெட்டிகள் 5 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன

Posted On: 17 JUN 2020 5:45PM by PIB Chennai

கொவிட்-19 கவனிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ள 5,231 ரயில் பெட்டிகளை மாநிலங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வேத்துறை முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் பெட்டிகள், மிதமான மற்றும் மிக மிதமான கொவிட்-19 தொற்று உள்ளவர்களுக்கு கவனிப்பு மையங்களாகப் பயன்படுத்தப்பட உள்ளன.

     தில்லி, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மத்தியப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு 960 கொவிட் கவனிப்பு ரயில் பெட்டிகளை, ரயில்வேத்துறை அனுப்பி வைத்துள்ளது. இதில் தில்லிக்கு 503, ஆந்திரப்பிரதேசத்துக்கு 20, தெலங்கானாவுக்கு 60, உத்தரப்பிரதேசத்திற்கு 372 மற்றும் மத்தியப்பிரதேசத்திற்கு 5 ரயில்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 

தில்லிக்கு அளிக்கப்பட்டுள்ள கொவிட் கவனிப்பு ரயில்பெட்டிகள் 9 இடங்களிலும், உத்தரப்பிரதேசத்திற்கு அளிக்கப்பட்டுள்ளவை 23 பகுதிகளிலும், மத்தியப்பிரதேசத்திற்கு வழங்கபபட்டுள்ள பெட்டிகள் குவாலியரிலும், ஆந்திரப்பிரதேசத்திற்கு அளிக்கப்பட்டவை விஜயவாடாவிலும், தெலங்கானாவுக்கு வழங்கப்பட்ட ரயில்பெட்டிகள், செகந்திராபாத், கச்குடா, அதிலாபாத், ஆகிய நரகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

------
 



(Release ID: 1632281) Visitor Counter : 184