உள்துறை அமைச்சகம்

கால்வான் பள்ளத்தாக்கில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 17 JUN 2020 5:52PM by PIB Chennai

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.    லடாக்கின் கால்வான் பகுதியில், தாய்நாட்டைக் காக்கும் பணியின்போது, வீரமிக்க நமது வீரர்கள் உயிரிழந்திருப்பதை, வார்த்தைகளால் அடக்கி விட முடியாது.  இந்தியப் பகுதிகளை பாதுகாப்பானதாகவும், பத்திரமாகவும் வைத்திருக்க ஏதுவாக, தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து, உயிரிழந்த நமது வீரர்களுக்கு, நாடே வீரவணக்கம் செலுத்துகிறது.  அவர்களது  துணிச்சல், தாய்நாட்டைக் காக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளதுஎன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இவர்களைப் போன்ற தலைசிறந்த வீரர்களை ராணுவத்திற்கு அனுப்பிய வீரர்களின் குடும்பத்தினருக்கு தலைவணங்குகிறேன்.  அவர்களது உச்சகட்ட தியாகத்திற்கு, இந்தியா எப்போதும் கடமைப்பட்டுள்ளது.  இந்தத் துயரமான தருணத்தில்ஒட்டுமொத்த நாடும், மோடி அரசும், வீரர்களின் குடும்பத்தினருக்கு துணையாக இருக்கும். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்றும் மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.   

*****


(रिलीज़ आईडी: 1632277) आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Telugu