உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, அனைத்து தில்லி மருத்துவமனைகளும் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை விரைவுபடுத்துகின்றன.
Posted On:
16 JUN 2020 8:36PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் (மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்), ஜூன் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு இணங்க, கொரோனாவால் இறந்தவர்களின் இறுதி சடங்குகளை இன்று விரைவுபடுத்தியுள்ளன. கொரானாவால் இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்களின் ஒப்புதல் / இருப்புடன் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களின் இறுதிச் சடங்கினை மேற்கொண்டனர்.
மேலும், இறந்த 36 நோயாளிகளின் குடும்பத்தினர் தில்லியில் இல்லாத காரணத்தினால் அவர்களின் இறுதி சடங்கு நாளை மேற்கொள்ளப்படும்.
கொரானாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதில் எந்தவித தாமதமும் ஏற்படக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் கடுமையான வழிமுறைகளை வகுத்தளித்துள்ளது.
*****
(Release ID: 1632000)
Visitor Counter : 323
Read this release in:
English
,
Urdu
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu