உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கொவிட்-19 தொடர்பான ஏற்பாடுகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Posted On:
15 JUN 2020 6:59PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கொவிட்-19 தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா மருத்துவமனைகள் அனைத்திலும், கொரோனா நோயாளிகளை முறையாகக் கண்காணித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், கொரோனா வார்டுகளில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவுமாறு, தில்லி தலைமைச் செயலருக்கு திரு. அமித் ஷா அறிவுறுத்தினார்.
மருத்துவமனைகளில் செயல்படும் உணவு விடுதிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யுமாறு தில்லி தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். ஒரு உணவு விடுதியில் தொற்று பாதித்தால், நோயாளிகள் இடையூறின்றி உணவு பெறுவதற்கு வசதியாக இந்த ஏற்பாட்டைச் செய்யுமாறு அவர் பணித்தார்.
கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வரும் சிகிச்சை மூலம் மனித குலத்துக்கு தொண்டாற்றி வரும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உளவியல்-சமூக ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்று திரு. அமித் ஷா அறிவுறுத்தினார். இந்த ஏற்பாடு கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்கள் உடல் ரீதியில் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியிலும் தகுதியாக இருப்பதை உறுதி செய்யும்.
--------------
(Release ID: 1631792)
Visitor Counter : 259