நிதி அமைச்சகம்

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி (CGST) மற்றும் சுங்க அலுவலகங்களில் இணைய அலுவலகத்தைப் (e-office) பயன்படுத்தத் தொடங்குகிறது.

प्रविष्टि तिथि: 15 JUN 2020 4:52PM by PIB Chennai

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் திரு. எம்.அஜித்குமார், இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை (CGST) செலுத்த அனைத்து சுங்க அலுவலகங்களில் இணைய அலுவலகத்தை இன்று தொடங்கினார். சிபிஐசியின் 800க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் முன்னிலையில் தொலைதூர இணைய – அலுவலக App தொடங்கப்பட்டது. இதில் தேசியத் தகவல் மையத்தின் (NIC என்.ஐ.சி) தலைமை இயக்குநர், டாக்டர் நீதா வர்மாவும் கலந்து கொண்டார்.

 

50,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்தப் பயன்பாட்டை உள் அலுவலக நடைமுறைகளைத் தானியக்கமாக்குவதன் மூலம் அரசாங்கத் துறைகளின் இணைய – அலுவலகங்களில் மிகப்பெரிய ஒன்றாக சிபிஐசி –ஐ மாற்றுவார்கள்.

 

இணைய-அலுவலகத்தின் வெளியீடு உள் அலுவலக நடைமுறைகளில் இதுவரை கோப்புகளை கையாளுதல் அனைத்தும் காகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான வியாபாரத்தை எளிதாக்குவதை நேரடி நோக்கமாகக் கொண்ட இந்த இணைய - அலுவலகம் அதன் பல தகவல் தொழில்நுட்பத் தலைமையிலான சீர்திருத்தங்களைப் பூர்த்தி செய்யும் என்று சிபிஐசி எதிர்பார்க்கிறது.

 

முகமற்ற, தொடர்பில்லாத மற்றும் காகிதமில்லாத’ மறைமுக வரி நிர்வாகத்தை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் சிபிஐசி மேற்கொண்ட மேலும் ஒரு நடவடிக்கையே இந்த இணைய - அலுவலகம்.

 

ந்த இணைய - அலுவலகப் பயன்பாடு, தேசியத் தகவல் மையத்தால் (என்.ஐ.சி) உருவாக்கப்பட்டதுடன் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகளுக்கான துறை (டிஏஆர்பிஜி – DARPG) ஆதரிக்கிறது. கோப்புகளை கையாளுவதற்கான உள் செயல் முறைகளைத் தானியங்குபடுத்துவதன் மூலமும், அரசாங்கத்திற்குள் முடிவுகளை எடுப்பதன் மூலமும் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இந்த இணைய - அலுவலகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இணைய - அலுவலகப் பயன்பாட்டின் முக்கிய நோக்கம், இணையக் கோப்புகள் (eFile) இணையக் கோப்பு தொடர்பான வேலைகளை குறிப்பாக DAK பெறுவது மற்றும் குறிப்பது தொடங்கி, ஒரு கோப்பை இயக்குவது, வரைவுக் கடிதத்தை தயாரித்தல், அதன் ஒப்புதல் / கையொப்பம் மற்றும் கையொப்பமிடப்பட்ட கடிதத்தை அனுப்புதல் ஆகியவற்றை செயல்படுத்துவதாகும்.

 

இணைய அலுவலகம் என்பது இந்தியாவின் தேசிய இணைய-ஆளுகையின் கீழ் ஒரு மிஷன் பயன்முறை திட்டம் (எம்.எம்.பி) ஆகும்.

 

****

 

RM/KMN


(रिलीज़ आईडी: 1631758) आगंतुक पटल : 997
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Odia , Telugu , Malayalam