உள்துறை அமைச்சகம்

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், தில்லி துணை நிலை ஆளுநர் திரு அனில் பைஜால், முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால், தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, தில்லியில் கோவிட் -19 நிலைமை குறித்து ஆய்வு

Posted On: 14 JUN 2020 8:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நமது நாட்டையும், நம் நாட்டுத் தலைநகரத்தையும், கொரோனா தொற்றிலிருந்து விடுவித்து, சுதந்திரமான, ஆரோக்கியமான, வளமான தேசமாக ஆக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார். மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், தில்லி துணை நிலை ஆளுநர் திரு அனில் பைஜால், முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால், தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு திரு அமித் ஷா தலைமை வகித்தார்.

   முன்னதாக இன்று காலையில் நடைபெற்ற கூட்டத்தில், வீடு வீடாக கணக்கெடுப்பது மற்றும் கொரோனா பரிசோதனை செய்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அவற்றை மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் மூன்று தில்லி மாநகராட்சிகளும்  முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். பரஸ்பர ஒருங்கிணைப்பின் மூலம், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

----


(Release ID: 1631628)