விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண்துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பதன் அவசியம் குறித்து மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திரசிங் தோமர் வலியுறுத்துதல்.

Posted On: 13 JUN 2020 8:47PM by PIB Chennai

வேளாண்துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது பற்றி மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்தறை அமைச்சர் திரு.நரேந்திரசிங் தோமர் வலியுறுத்தியுள்ளார். மீரட்சி.எச்.சரண்சிங் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த சர்வதேச இணையக் கருத்தரங்கு மற்றும் ஜூனாகத் வேளாண் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த தேசிய இணையக் கருத்தரங்கு ஆகியவற்றில் உரையாற்றிய திரு.நரேந்திரசிங் தோமர், வேளாண்துறையில் தனியார் முதலீடு, செழிப்பத்தை அதிகரிக்கும், இதன் மூலம் நாட்டின் சுயசார்புத் தன்மையும், வளமும் அதிகரிக்கும் என்றார். வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், சிக்கல்களைக் குறைக்கவும் விஞ்ஞானிகள் தங்கள் பங்களிப்பை அளிக்கவேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

மீரட் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில் பேசிய திரு.தோமர், உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றதோடு அல்லாமல் கூடுதலாகவும் உற்பத்தி செய்துள்ளது என்றார். சிக்கலான சவால்களையும் சமாளிக்க முடியும் என்பதை விவசாயிகள் நிரூபித்துள்ளனர். 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 160 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தரமான உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் வறட்சி, உவர், மற்றும் அமிலத்தன்மை மிக்க நிலங்கள் போன்ற சாதகமற்ற சூழ்நிலைகளிலும், நோய் எதிர்ப்பு, பூச்சி எதிர்ப்புத் தாவர வகைகளை உருவாக்கும் வகையில் முற்போக்கான விவசாய முறைகளை மேற்கொண்டு அனைத்து இந்தியர்களுக்கும், போதிய சத்தான உணவை வழங்க வேண்டிய சவாலை இந்தியாவில் உள்ள விவசாயிகளும், விஞ்ஞானிகளும் சந்தித்துள்ளனர்.

வேளாண் துறையில் தனியார் முதலீட்டைக் கவர, வேளாண் கட்டமைப்பை ரூ.1 லட்சம் கோடிக்கு மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் திரு.நரேந்திரமோடி அறிவித்துள்ளார் என திரு.தோமர் கூறினார். இதே போன்ற திட்டங்கள் மீன்வளம், கால்நடை வளர்ப்பு,தேனீ வளர்ப்பு, மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பு மற்றும் உணவுபதப்படுத்துதல் போன்ற பல துறைகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை மற்றும் அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் திரு.தோமர் வலியுறுத்தினார்.



(Release ID: 1631495) Visitor Counter : 234