பிரதமர் அலுவலகம்

கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் ஆய்வு

Posted On: 13 JUN 2020 6:05PM by PIB Chennai
  • -19 பெருந்தொற்றை ஒழிக்க இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் திரு.நரேந்திரமோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு நடத்தினார். கோவிட் பெருந்தொற்று தொடர்பான ஆயத்த நிலை மற்றும் தேசிய அளவிலான நிலவரம் குறித்து, இந்தக் கூட்டத்தின்போது பிரதமர் ஆய்வு செய்தார். பல்வேறு மாநிலங்கள் மற்றும் தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் தற்போதைய நிலைமை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சரவை செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநர் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
  • பங்கேற்ற நிதிஆயோக்கின் உறுப்பினரும், மருத்துவ அவசர மேலாண்மைத் திட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் உறுப்பினருமான டாக்டர். வினோத் பால், நடுத்தர கால அடிப்படையில், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து விரிவான விளக்கம் அளித்தார். பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பேர், அதிக பாதிப்புடைய பெருநகரங்களைக் கொண்ட 5 மாநிலங்களில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பெரு நகரங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களைக் கருத்தில் கொண்டு, பரிசோதனைகள் மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிப்பது பற்றி விவாதிக்கப்பட்டதுடன், நோய் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான மேம்பட்ட சேவைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
  • மற்றும் மாவட்ட வாரியாக மருத்துவமனைகளில் தேவைப்படும் படுக்கை வசதிகள் / தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் குறித்து, அதிகாரமளிக்கப்பட்ட குழு அளித்து பரிந்துரைகளைப் பரிசீலித்த பிரதமர், மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளைக் கலந்தாலோசித்து, அவசரகால செயல்திட்டத்தை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பருவமழை காலத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற ஆயத்த நிலைகளை உறுதி செய்யுமாறும், பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
  • கோவிட்-19 தொற்று தொடர்பான தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், அடுத்த 2 மாதங்களுக்கான கணிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தில்லி துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் மத்திய அரசின் அனைத்து உயர் அதிகாரிகள், தில்லி அரச மற்றும் தில்லியில் உள்ள மாநகராட்சிகளின் அதிகாரிகள் பங்கேற்கும் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தி, கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்து வருவதால் எழுந்துள்ள நிலைமையை எதிர்கொள்ள, ஒருங்கிணைந்த மற்றும் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
  • -19 பெருந்தொற்று பரவாமல் தடுக்கவும், இந்நோயைக் கட்டுப்படுத்தவும், பல்வேறு மாநில, மாவட்ட மற்றும் மாநகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைசிறந்த நடவடிக்கைகளுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகள், மற்ற பகுதிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், புதுமையான யோசனைகளை வழங்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

*****



(Release ID: 1631417) Visitor Counter : 254