பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்-19 சூழல் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்களின் மூலதன கையகப்படுத்தல் விநியோகங்களை நான்கு மாதங்கள் வரை பாதுகாப்பு அமைச்சகம் நீட்டித்துள்ளது

Posted On: 12 JUN 2020 12:36PM by PIB Chennai

கோவிட்-19 வைரஸ் தொற்றால் எழும் விநியோக சங்கிலி தொடர்  இடையூறுகள் காரணமாக இந்திய விற்பனையாளர்களுடன் தற்போதுள்ள அனைத்து மூலதன கையகப்படுத்தல் ஒப்பந்தங்களுக்கான விநியோக காலத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நான்கு மாதங்கள் வரை நீட்டித்துள்ளது .

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்-கின் முறையா ஒப்புதலுடன், அமைச்சகத்தின் கையகப்படுத்துதல் பிரிவு இன்று இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், "வலுவான தடை காரணமாக, இந்த நீட்டிப்பு நான்கு மாத காலத்திற்கு, அதாவது 2020 மார்ச் 25 முதல் 2020 ஜூலை 24 வரை பொருந்தும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவில்,ஒப்பந்த உபகரணங்கள் வழங்குவதில் தாமதம்/ சேவை மற்றும் முடக்கப்பட்ட காலத்திற்கான பாதிப்பு கட்டணங்கள் விதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடும் போது வலுவான தடை காலத்திற்கு விலக்கு அளிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

கோவிட்-19 சூழல் காரணமாக அதன் உற்பத்திக்கான கால அட்டவணைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை உள்நாட்டு பாதுகாப்புத் தொழிலுக்கு பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும்.

எனினும், ஒப்பந்தம் செய்யப்பட்ட சாதனங்களை நீட்டிக்கப்பட்ட காலவரையறைக்குள் இந்திய விற்பனையாளர்கள் எளிதாக சிறந்த முறையில் விநியோகம் செய்ய முடியம் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவு மேலும் கூறுகிறது.

மேலும், இந்த உத்தரவின்படி அதன் முடிவை நடைமுறைப்படுத்துவதில் தனிப்பட்ட திருத்தங்கள் எதுவும் தேவை இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விற்பனையாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தை அணுகலாம். அவரவர் நாடுகளில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களது கோரிக்கைகள் பரிசிலிக்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1631122) Visitor Counter : 268