ரெயில்வே அமைச்சகம்

மொத்தம் 5231 ரயில் பெட்டிகள் கொவிட் நல மையங்களாக மாற்றியமைப்பு

Posted On: 11 JUN 2020 6:16PM by PIB Chennai

  ரயில்வேத்துறை 5231 ரயில் பெட்டிகளை கொவிட் நல மையங்களாக மாற்றியமைத்துள்ளது. இந்த ரயில் பெட்டிகளை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை தனிமைப்படுத்தும் வசதிகள் அதிகமாக தேவைப்படும் மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும், நிதி ஆயோக்கும் வடிவமைத்துள்ள ஒருங்கிணைந்த கொவிட் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த மாற்றியமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளாகும். மொத்தம்  215 ரயில் நிலையங்களில், 85 ரயில் நிலையங்களில் ரயில்வேத்துறை மருத்துவ வசதிகளை அளிக்கிறது.

-----


(Release ID: 1631086) Visitor Counter : 184