தேர்தல் ஆணையம்

கர்நாடக மாநில மேலவைக்குத் தேர்தல்

Posted On: 09 JUN 2020 1:47PM by PIB Chennai

கர்நாடக மாநிலத்தின் மேலவைக்கு, சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 7 மேலவை உறுப்பினர்களின்  பதவிக்காலம் இம்மாதம் 30-ம் தேதியன்று நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்தல் பணிகளை, தேர்தல் ஆணையம், கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் கலந்தாலோசித்து துவக்க உள்ளது. 

கர்நாடக மேலவைத் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 11-ம் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 18.06.2020 என்றும் தேர்தல் 29.06.2020 அன்று நடைபெறும் என்றும் வாக்குகள், 29.06.2020 அன்று மாலை ஐந்து மணிக்கு எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

-----



(Release ID: 1630451) Visitor Counter : 221