நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு ராம்விலாஸ் பாஸ்வான் சர்க்கரைத் துறை தொடர்பான விஷயங்களை உணவு, பொது விநியோகத்துறை அதிகாரிகளுடன் மீளாய்வு

Posted On: 08 JUN 2020 8:51PM by PIB Chennai

மத்திய உணவு, பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ராம்விலாஸ் பாஸ்வான்,  உணவு     மற்றும் பொது விநியோகத்துறையின் செயலர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இன்று புதுதில்லியில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், சர்க்கரை உற்பத்தி, கரும்பு விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை, எத்தனால் உற்பத்தி மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கரும்பு விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினைக் குறித்த காலத்தில் செலுத்துவதற்குத் தேவையான நெறிமுறைகளை பிறப்பிக்குமாறு  திரு பாஸ்வான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

     கையிருப்பில் உள்ள 40 எல்எம்டி சர்க்கரையை, இருப்பில் வைப்பதற்கான கட்டணம் ரூ.1,674 கோடியை அரசு திருப்பித் தந்துள்ளது. சர்க்கரை ஆலைகள் 60 எல்எம்டி சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.10,448 வீதம் அரசு நிதியுதவி செய்கிறது.  இதற்கான மொத்த செலவு ரூ.6,268 கோடியாகும்.

-----


(Release ID: 1630388) Visitor Counter : 280