ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நடப்பு நிதியாண்டில் தனது தொழில் தயாரிப்புகளின் ஒட்டுமொத்த விற்பனையில் ஆர் சி எப் ரூ 100 கோடியைத் தாண்டியது.

Posted On: 06 JUN 2020 5:01PM by PIB Chennai

இந்திய அரசின் உரங்கள் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனம் (Rashtriya Chemicals and Fertilizers Ltd- RCF), தற்போதைய கொவிட்-19 நிலைமையிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டு நடப்பு நிதியாண்டான 2020-2021-இன் முதல் இரண்டு மாதங்களிலேயே தனது தொழில் தயாரிப்புகளின் ஒட்டுமொத்த விற்பனையில் ஆர் சி எப் ரூ 100 கோடியைத் தாண்டியுள்ளது.

 

2018-2019-இன் நான்காம் காலாண்டோடு ஒப்பிடும் போது, RCF-இன் வரிகளுக்குப் பின்பான லாபம் 2019-2020-இல் நான்காம் காலாண்டில் 190 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

கடந்த வருடத்தின் ரூ 48.47 கோடியோடு ஒப்பிடும் போது, தேசிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தின் வரிகளுக்குப் பின்பான நிகர லாபம் மார்ச் காலாண்டில் 193.54 சதவீதம் உயர்ந்து, ரூ 142.28 கோடியாக உள்ளது.

 

2018-2019 நிதியாண்டோடு ஒப்பிடும் போது, RCF-இன் வரிகளுக்குப் பின்பான லாபம் 2019-2020 நிதியாண்டில் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

31 மார்ச், 2020 அன்றோடு முடிந்த நிதியாண்டில், வரிகளுக்குப் பின்பான லாபம் ரூ 208.15 கோடியாக உயர்ந்ததுகடந்த வருடம் இது ரூ 139.17 கோடியாக இருந்தது.

 

சில வகையான செடிகளுக்கு (30 வயது + எரிவாயுவாக மாற்றக்கூடியது) ஒரு டன்னுக்கு ரூ 150 என அறுவடை நிதிச் சலுகைக்கு அரசு ஒப்புதல் அளித்ததாலும், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு புதிய விலை நிர்ணயத் திட்டம்-3-இன் கீழ் ஒரு டன் உரத்துக்குக் கூடுதல் நிர்ணய விலையாக ரூ. 350க்கு ஒப்புதல் தந்ததாலும், உரத் துறைக்கு சற்றே நிவராணம் கிடைத்தது. 2019-20  நிதியாண்டில் RCF இதற்கு பொறுப்பேற்றது.

 

நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிகபட்ச ஈவுத்தொகையாக 28.49 சதவீதத்தை இயக்குநர்கள் குழுப் பரிந்துரைத்தது.

***



(Release ID: 1629934) Visitor Counter : 238