எரிசக்தி அமைச்சகம்
உலக சுற்றுச்சூழல் தினத்தில் ‘#iCommit’ முன்முயற்சியைத் தொடங்கி வைத்தார் மின் துறை அமைச்சர்.
Posted On:
05 JUN 2020 5:07PM by PIB Chennai
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஆர்.கே. சிங், ‘#iCommit’ இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். தொடர்புடைய அனைவரும், தனிநபர்களும் மின்சார சிக்கனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எதிர்காலத்தின் தேவைகளை தாங்கும் திறன் கொண்ட, துடிப்பான நீடித்த நுட்பங்களை உருவாக்கவும் ஊக்குவிப்பதாக இந்த முன்முயற்சி இருக்கும்.
‘#iCommit’ என்ற இந்த முன்முயற்சி, மத்திய மின் துறை அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் எரிசக்தி சிக்கன சேவைகள் லிமிடெட் (EESL) உந்துதலால் உருவாக்கப்பட்டது. அரசுகள், கார்ப்பரேட்கள், பன்முக மற்றும் இருதரப்பு நிறுவனங்கள், சிந்தனை அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என்ற பரவலான பலரையும் ஒருங்கிணைப்பதாக இந்த முன்முயற்சி அமைந்துள்ளது.
இந்த முன்முயற்சி பற்றி குறிப்பிட்ட திரு சிங், ``நாட்டில் எரிசக்தி மதிப்புச் சங்கிலித் தொடரில் முழுமையான மாற்றத்தை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். அனைத்து குடிமக்களுக்கும் 24 X 7 மின்சார வசதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான திட்டங்களை நாம் வகுத்து வருகிறோம். ‘#iCommit’ என்ற இந்த முன்முயற்சி, குறிப்பாக உலகச் சுற்றுச்சூழல் பின்னணியில் தொடங்கப்படும் இந்த முயற்சியால் அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள பலதரப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, இந்தியாவுக்கு புதிய எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்க உதவக் கூடியதாக இருக்கும்'' என்று கூறினார்.
(Release ID: 1629870)