சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்
Posted On:
04 JUN 2020 4:45PM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில் 3,804 கோவிட்-19 நோயாளிகள் குணமாக்கப்பட்டுள்ளனர். எனவே இதுவரையில் மொத்தம் 1,04,107 பேருக்கு கோவிட்-19 குணமாக்கப் பட்டுள்ளது. கோவிட்-19 பாதித்தவர்களில், குணம் பெறுபவர்களின் எண்ணிக்கை 47.99 சதவீதமாக உள்ளது. இப்போது 1,06,737 பேர் சிகிச்சையில், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
நோய்த் தொற்று ஏற்பட்டவர்களிடம் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைத் திறன்களை ஐ.சி.எம்.ஆர். மேலும் அதிகரித்துக் கொடுத்துள்ளது. அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது. தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,39,485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 42,42,718 மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளன.
(Release ID: 1629434)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam