சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட் 19 பற்றிய சமீபத்திய தகவல்கள்
குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரிப்பு
உயிரிழப்போர் விகிதம் 2.80 சதவீதமாகக் குறைந்தது.
Posted On:
03 JUN 2020 3:15PM by PIB Chennai
கடந்த 24 மணிநேரங்களில் மொத்தம் 4,776 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 303 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளில் குணம் அடைவோர் சதவிகிதம் 48.31சதவீதமாக உள்ளது. தற்போது 1,01,497 பேருக்கு கோவிட்-19 நோய் உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்.
உயிரிழப்போர் சதவிகிதம் 2.80 சதவீதம்
நாட்டில் நோய் பரிசோதனைத் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. 480 அரசு ஆய்வுக்கூடங்கள், 208 தனியார் ஆய்வுக்கூடங்கள் உட்பட மொத்தம் 688 ஆய்வுக்கூடங்கள் உள்ளன. இதுவரை 41,03,233 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 158 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கோவிட்-19 மேலாண்மைக்கான சுகாதாரக் கட்டமைப்பைப் பொறுத்தவரை நாட்டில், தற்போது கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள 952 மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 166332 தனிப்படுக்கைகளும், 21,393 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், பிராணவாயு உதவி கொண்ட 72762 படுக்கைகளும் உள்ளன.
கோவிட்-19 சிகிச்சைக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட 2391 சுகாதார மையங்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 945 தனிப்படுக்கைகளும், 11027 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், பிராணவாயு வசதிகொண்ட 46 ஆயிரத்து 575 படுக்கைகளும் உள்ளன.
மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் / மத்திய அமைப்புகள் ஆகியவற்றுக்கு 125. 28 லட்சம் என்-95 முகக் கவசங்களும், 101.54 லட்சம் தனிநபர் பாதுகாப்புக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன.
(Release ID: 1629082)
Visitor Counter : 270
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam