பாதுகாப்பு அமைச்சகம்

மேற்கு விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் பி சுரேஷ், PVSM AVSM VM ADC ஹல்வாரா, விமான படைத் தளத்திற்கு வருகை.

Posted On: 03 JUN 2020 3:16PM by PIB Chennai

மேற்கு விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் சுரேஷ், ல்வாராவில் உள்ள விமானப்படை தளத்திற்கு 3 ஜூன் 2020 அன்று வருகை தந்தார். ல்வாரா விமானப்படை தளத்தின் விமானப்படைத் தளபதி ஏர் கமோடார் ஏ. பத்ரா அவரை வரவேற்றார்.

 

மேற்கு விமானப்படைத் தலைமைத் தளபதி, விமானப்படை தளத்தில் பல்வேறு நிலைகளை ஆய்வு செய்தார். இயக்கச் செயல்பாடுகளின் தயார் நிலையையும் மதிப்பீடு செய்தார். கோவிட்- 19 பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான தயார் நிலையையும் பரிசீலித்தார். பெருந்தொற்று நோய் அச்சுறுத்தலுடன், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளோம் என்பதால் மிகத் துல்லியமாக திட்டமிட்டு, இந்த சவாலான காலகட்டங்களில் நமக்குள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தி இயக்க செயல்திறனை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

 



(Release ID: 1629081) Visitor Counter : 157