எரிசக்தி அமைச்சகம்

மின்துறையில் இந்தியா முழுமைக்குமான நிகழ்நேரச் சந்தையை, மத்திய மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Posted On: 03 JUN 2020 12:45PM by PIB Chennai

மின்துறையில் இந்தியா முழுமைக்குமான நிகழ்நேரச் சந்தையை புதுதில்லியில் ஜூன் 3,2020ஆம் தேதி அன்று காணொளிக் காட்சி மூலம் மத்திய மின்துறை இணைஅமைச்சர் (பொறுப்பு) மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணைஅமைச்சர் மற்றும் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் தொடங்கிவைத்தார்உலகளவில் நிகழ்நேரச் சந்தையை வைத்திருக்கும் சில மின்சந்தைகளில் ஒன்றாக நிலை இந்திய மின்துறை சந்தையை  இது நிலை நிறுத்தியுள்ளது.

 

இந் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பான்-இந்தியா விற்பனையாளர்களின் எரிசக்தித் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கும், இந்த நிகழ்நேரச் சந்தை திட்டமிட்ட அமைப்பு என்பதை சுட்டிக்காட்டினார். நிகழ்நேரச் சந்தை அறிமுகம், சந்தையில் நிகழ்நேரச் சமநிலையை வழங்கத் தேவையான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரும். அதே நேரத்தில் இந்த அமைப்பில் கிடைக்கும் கூடுதல் திறனை உகந்த அளவு பயன்படுத்துவதை உறுதிசெய்யும். தேசிய அளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையுடன், நாட்டின் தேவையில் பன்முகத்தன்மையைச் சமாளிக்க இது உதவும்

நிகழ்நேரச் சந்தை ஒருநாளில் ஒவ்வொரு 30 நிமிடத்துக்குள்ளும், ஒரே விலையுடன் கூடிய ஏலமாக இருக்கும். சந்தைச் செயல்பாட்டு நேரத்தில் விரும்பிய உறுதியினைக் கொண்டு வருவதற்கு, ‘கதவுமூடல்என்ற கருத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாங்குவோரும்/விற்போரும் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஏலம் கேட்கலாம். இந்த நிகழ்நேரச் சந்தை மின்விநியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்) போட்டி விலையில் மிகப்பெரிய சந்தையை அணுக மாற்று முறையை வழங்கும். மறுபுறம், உற்பத்தியாளர்கள் தங்கள் தேவையற்ற கோரிக்கைத் திறனுடன், இந்த நிகழ்நேரச் சந்தையில் பங்குபெற்றுப் பயனடையலாம். நீண்ட கால ஒப்பந்தம் பெற்ற உற்பத்தியாளர்கள், இந்த நிகழ்நேரச் சந்தையில் கலந்து கொண்டு, டிஸ்காம்நிறுவனங்களுடன் நிகர ஆதாயத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்நேரச் சந்தையில் விரைவான பரிமாற்றத்தை உறுதி செய்ய தேசிய மின்சுமை விநியோக மையம்- போசோகோ, தேவையான தானியங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு வசதியையும் அளிக்கிறது.

2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் ஆர்திறன் என்ற உருவாக்க மத்திய அரசின் இலக்கு, பான்-இந்தியாவின் தூண்டப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஊடுருவலை இயக்குகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் இடைப்பட்ட மற்றும் மாறுபட்ட தன்மை காரணமாக மின்தொகுப்பு நிர்வாகச் சவால்களை குறைக்க இந்த நிகழ்நேரச் சந்தை உதவும். மேலும் மின்தொகுப்புக்குள், அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைக்க உதவும்.

இதன் மூலம் குறைவான ஏலநேரம், விரைவான திட்டமிடல், வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மின்தொகுப்பு வளங்களை, பங்குதாரர்கள் அணுகி, போட்டியை அதிகரிப்பர். திறமையான மின் கொள்முதல் திட்டவசதி, திட்டமிடல், விநியோகம், ஏற்றத்தாழ்வு கையாளுதல் போன்வற்றால், துறை நிர்வாகம் சிறக்க இது வழிவகுக்கும்


(Release ID: 1629007) Visitor Counter : 302