சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள் குணமாகும் விகிதம் 48.18 சதவீதமாக அதிகரித்துள்ளது
Posted On:
01 JUN 2020 3:28PM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோயாளிகள் 4,835 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 91,818 பேர் இதுவரையில் குணம் பெற்றிருக்கிறார்கள். குணம் அடையும் கொவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 48.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. குணம் அடையும் விகிதம் 18 மே அன்று 38.29 சதவீதமாக இருந்த நிலையில், மே 3 அன்று அது 26.59 சதவீதமாகவும், ஏப்ரல் 15 அன்று 11.42 சதவீதமாகவும் இருந்தது.
நாட்டில் தற்போது 93,322 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர். இறப்பு விகிதம் 2.83 சதவீதமாக இருக்கிறது.18 மே அன்று இது 3.15 சதவீதமாகவும், 3 மே அன்று 3.25 சதவீதமாகவும், 15 ஏப்ரல் அன்று 3.30 சதவீதமாகவும் இருந்தது. நாட்டில் இறப்பு விகிதத்தில் தொடர் வீழ்ச்சியைக் காணலாம். கண்காணிப்பின் மீது தொடர் கவனம், சரியான நேரத்தில் பாதிப்புகளைக் கண்டறிதல் மற்றும் நோயாளிகளின் மருத்துவ மேலாண்மை ஆகியவை குறைவான இறப்பு விகிதத்துக்கானக் காரணங்களாகத் திகழ்கின்றன.
இரண்டு குறிப்பிட்ட போக்குகள் கவனம் பெற்றுள்ளன. குணமாகும் விகிதம் அதிகமாகிக் கொண்டே வரும் அதே வேளையில், இறப்பு விகிதம் குறைந்துக் கொண்டே வருகிறது. 472 அரசு ஆய்வகங்கள் மற்றும் 204 தனியார் ஆய்வகங்கள் (மொத்தம் 676 ஆய்வகங்கள்) மூலம், கொவிட் தாக்குதலைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யக் கூடிய திறன் அதிகரித்துள்ளது. இதுவரையில் மொத்தம் 38,37,207 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 1,00,180 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையில் மரணங்களை சந்தித்துள்ள நாடுகளின் இறப்பு விகிதம் குறித்து, 31 மே தேதியிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் நிலைமை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு:
நாடுகள்
|
மொத்த மரணங்கள்
|
இறப்பு விகிதம்
|
உலகம்
|
367,166
|
6.19%
|
அமெரிக்கா
|
1,01,567
|
5.92%
|
இங்கிலாந்து
|
38,376
|
14.07%
|
இத்தாலி
|
33,340
|
14.33%
|
ஸ்பெயின்
|
29,043
|
12.12%
|
பிரான்சு
|
28,717
|
19.35%
|
பிரேசில்
|
27,878
|
5.99%
|
பெல்ஜியம்
|
9,453
|
16.25%
|
மெக்சிகோ
|
9,415
|
11.13%
|
ஜெர்மனி
|
8,500
|
4.68%
|
ஈரான்
|
7,734
|
5.19%
|
கனடா
|
6,996
|
7.80%
|
நெதர்லாந்து
|
5,951
|
12.87%
|
(Release ID: 1628759)
Visitor Counter : 292