விவசாயத்துறை அமைச்சகம்

மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31,2020 வரை உள்ள வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான குறுகிய காலக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் தேதியை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது.

Posted On: 01 JUN 2020 5:42PM by PIB Chennai

பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக வங்கிகளால் வழங்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் வரை நிலையான குறுகிய காலக் கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் தேதியை 31.08.2020 வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.  மார்ச் 1 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை வங்கிகளுக்கு 2 சதவீத வட்டி வழங்கல் (IS) மற்றும் 3 சதவீத உடனடி திருப்பிச் செலுத்தும் ஊக்கத்தொகை (PRI) ஆகியவற்றின் தொடர்ச்சியான நன்மைகளை விவசாயிகளுக்கு அளிக்கிறது.

பலன்கள்

மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020க்கு இடையில் கட்ட வேண்டிய விவசாய மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான வங்கித் தவணைகள், 3 லட்சம் ரூபாய் வரை உள்ள நிலையான குறுகிய காலக் கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் தேதி 31.08.2020 வரை நீட்டித்து வங்கிகளுக்கு 2 சதவீதம் IS மற்றும் 3 சதவீதம் விவசாயிகளுக்கு PRI போன்ற சலுகைகள் அளிப்பதால், விவசாயிகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த அல்லது புதுப்பிக்கக் கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசமான ஆகஸ்ட் 31, 2020 வரை 4 சதவீத வட்டியுடன் எந்தவித அபராதமும் இன்றி திருப்பிச் செலுத்தலாம். மேலும், இதனால் அவர்கள் இந்த கொவிட் தொற்று காலத்தில் வங்கிக்கு செல்லும் சிரமத்தைக் குறைக்க முடியும்.

*******

 



(Release ID: 1628755) Visitor Counter : 178