ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பிரதமர் பாரதிய ஜன ஔஷதி கேந்திரா 2020- 21ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 100 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்து சாதனை.


2019- 20 ஆம் ஆண்டில் இதே காலத்தில் 40 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்திருந்தது.

प्रविष्टि तिथि: 01 JUN 2020 3:24PM by PIB Chennai

பிரதமர் பாரதிய ஜன ஷதி கேந்திராக்கள் (PMBJK) 2020- 21ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில், 100 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்து சாதனை புரிந்துள்ள. 2019- 20 ஆம் ஆண்டில் இதே காலத்தில் விற்பனை 40 கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது.

 

மார்ச், ஏப்ரல், மே 2020 வரையிலான காலத்தில் சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான தரமான, வாங்கக்கூடிய விலையிலான, மருந்துப் பொருள்களை இந்த கேந்திரங்கள் விற்பனை செய்துள்ளன. இதனால், கோவிட்-1நோயால் நாடு பாதிக்கப்பட்டிருந்த காலத்தின் போது, குடிமக்களுக்கு 800 கோடி ரூபாய் அளவிலான சேமிப்பு செய்ய முடிந்தது

 

கோவிட்-1பெருந்தொற்று உள்ள சிரமமான காலத்தில் அனைவருக்கும் அனைத்து மருந்துகளும் முழுமையாகக் கிடைப்பதை உறுதிசெய்வதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளோம் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா கூறியுள்ளார். பிரதமர் பாரதிய ஜன ஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தை பிரதமர் பாரதிய ஜன ஷதி கேந்திரங்கள் மூலமாக நடைமுறைப்படுத்துவதில் BPPI யின் முக்கியமான பங்கு குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

 

நெருக்கடி காலத்தில் BPPI ஊழியர்கள், கேந்திரங்களின் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், இதர பங்குதாரர்கள் ஆகியோர் அனைவரும் கரம் கோர்த்து பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்த சவாலான காலத்தில் BPPI அனைத்து பங்குதாரர்களுடனும், நுகர்வோருடனும் இணைந்து நிற்கிறது. பிரதமர் பாரதிய ஜன ஷதி கேந்திரங்கள் (PMBJK) தொடர்ந்து செயல்பட்டு, பங்காற்றி வருகின்றன

 


(रिलीज़ आईडी: 1628352) आगंतुक पटल : 317
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Assamese , English , Urdu , हिन्दी , Punjabi , Telugu