வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மருந்தாளுமைத் தொழில்துறையினர் மற்றும் சங்கங்களுடன் திரு.பியூஷ் கோயல் கலந்துரையாடல்.

Posted On: 31 MAY 2020 5:16PM by PIB Chennai

மருந்தாளுமைத் தொழில்துறையினர், மருந்தாளுநர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் காணொளி மாநாடு மூலமாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று கலந்துரையாடினார். மத்திய இணை அமைச்சர்கள் திரு எச் எஸ் பூரி, திரு சோம் பிரகாஷ்; வர்த்தகத்துறை, மருந்தாளுமைத் துறை ஆகியவற்றின் செயலர்கள்; வர்த்தகம், மருந்தாளுமை, சுகாதாரம் ஆகிய துறைகளின் அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கோவிட்-19 நெருக்கடி காலத்தின் போது சூழலுக்கு ஏற்றவாறு செயலாற்றி இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்துள்ளதாக, மருந்தாளுமைத் தொழில் துறையினருக்கு திரு. கோயல் பாராட்டு தெரிவித்தார். கடந்த 2 மாதங்களில் 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டதால் இந்தியா உலகின் மருந்தகம் ஆக அங்கீகரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். இதில் 40 நாடுகளுக்கு மருந்துகள் கட்டணம் இல்லாமல், கொடையாக வழங்கப்பட்டன. கோவிட் காலத்தின்போது DGFT, MEA, சுகாதாரம், பணியாளர் நலத்துறை ஆகிய துறைகள்/அமைச்சக அதிகாரிகள் இரவு பகலாக பணிபுரிந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சரக்குகள் அனைத்தும் உரிய நேரத்தில் சென்றடைந்தனவா என்பதை கண்காணித்துப் பணிபுரிந்தனர் என்று கூறினார். இந்தியாவின் செய்கையை உலகமே பாராட்டுகிறது. இந்தியா மீதான நல்லெண்ணத்தையும், நன்மதிப்பையும் இது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தேவையான அளவு உற்பத்தித்திறன் உள்ளது என்றும், HCQ , PCM போன்ற மருந்துகள், உள்நாட்டின் தேவைகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதன் அளவிற்கும் அதிகமாக போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றும் அவர் கூறினார். மருந்துகள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை விதிப்பது மருந்துகள் தேவைப்படும் அனைத்து நாடுகளுக்கும் அவை கிடைக்கச் செய்யவேண்டும்; முறையற்ற லாபத்திற்காக நேர்மையற்ற எவரும் மருந்துப்பொருள்களை மதிப்பிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே என்றும், அவர் கூறினார்.

இந்த காலகட்டத்தில் நாட்டில் எந்தவிதமான மருந்துகள் பற்றாக்குறையும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருந்தாளுமைத் துறை மிகச் சிறப்பாக செயலாற்றி இருப்பதற்காக அவர்கள் அமைச்சரின் பாராட்டுக்களைப் பெற்றனர்.  .

 

------



(Release ID: 1628257) Visitor Counter : 150