அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உயிரியல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள கோவிட் - 19 தொடர்பான விரைவில் பதில் அளிக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகள்.

Posted On: 30 MAY 2020 3:01PM by PIB Chennai

ரீகாம்பினன்ட் டிஎன்ஏ தொழில்நுட்பம் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிரிகள் தொடர்பான ஆராய்ச்சி, வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும், உயிரிப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு முறைகளை ஒழுங்கமைப்பதற்காகவும், தானாகவே, பல நடவடிக்கைகளை உயிரியல் தொழில்நுட்பத்துறை மேற்கொண்டு வருகிறது.

 

  1. இந்திய உயிரியல் பாதுகாப்பு அறிவுத்தளம் இயக்கம்: இந்த இணையதளம் மே 2019 தொடங்கப்பட்டது. அனைத்து புதிய விண்ணப்பங்களும், ஆன்லைன் இணையதளம் மூலமாகவே பெறப்படுகிறது. இதனால் அனைத்து வழிமுறைகளும் வெளிப்படையானதாகவும், கால வரம்பிற்கு உட்பட்டதாகும் உள்ளன.

 

  1. ஆராய்ச்சி வளர்ச்சி தொடர்பான நோக்கங்களுக்காக ஜி உயிரிகள் மற்றும் அவை தொடர்பான பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதி, பரிமாற்றம் ஆகியவை தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட, எளிமையாக்கப்பட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. திருத்திமைக்கப்பட்ட விதிமுறைகள் 2020  ஜனவரியில் வெளியிடப்பட்டது.

 

  1. கோவிட் - 19 தொடர்பான ஆராய்ச்சி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பது:. கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நிலைகளைக் கருத்தில்கொண்டு, கோவிட் - 19 தொடர்பான ஆராய்ச்சி வளர்ச்சிப்பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான தேவைகளைப் புரிந்துகொண்டு, இது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கும், தொழில் துறையினருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக, இந்தத் துறை பல நடவடிக்கைகளை தானாகவே எடுத்துள்ளது. கோவிட் - 19 என்பது தொடர்பாக பின்வரும் விதிமுறைகள், ஆணைகள், சரிபார்ப்புப் பட்டியல்கள் ஆகியவற்றை DBT வெளியிட்டுள்ளது.

 

  1. தடுப்பு மருந்துகள், நோயைக் கண்டறிதல், நோய் வராமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கைக்கான சிகிச்சை, நோய்க்கான சிகிச்சை முறைகள் ஆகியவற்றுக்கான ஆராய்ச்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கையாள்வதற்காக கோவிட் - 19 விரைவில் பதில் அளிக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (ராபிட் ரெஸ்பான்ஸ் ரெகுலேட்டரி ஃப்ரேம்வொர்க்), 20.3 .2020 அன்று அறிவிக்கப்பட்டது

 

 

  1. கோவிட்-19 மாதிரிகளைக் கையாள்கையில் ஆய்வுக்கூடங்களில் உயிரியல் பாதுகாப்பு பற்றிய இடைக்கால விதிமுறை ஆவணம் 8.4.2020 அன்று DBTயால் வெளியிடப்பட்டது. IBSCக்கள் தங்களது கூட்டங்களை காணொளி மாநாடு மூலமாக 30 ஜூன் 2020 வரை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

 

  1. ரீகாம்பினன்ட் டிஎன்ஏ தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சி வளர்ச்சிப் பணிகளுக்கான விரைவில் பதில் அளிக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் ராபிட் 26.5. 2020 அன்று வெளியிடப்பட்டது

 

 

 


(Release ID: 1627929) Visitor Counter : 194