மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களின் மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் கல்வி உள்கட்டமைப்பை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது - மனிதவள மேம்பாட்டு அமைச்சர்.
Posted On:
26 MAY 2020 6:43PM by PIB Chennai
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, இந்தியா முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களில், குறிப்பாக நாட்டின் வடகிழக்கு மாநிலங்களின் மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றார். இது தொடர்பாக, இந்த ஆண்டு அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். சிக்கிம் பல்கலைக்கழகத்தின் (மத்திய பல்கலைக்கழகம்) யாங்கியாங்கில் 986.47. கோடி ரூபாய் செலவில் நிரந்தர வளாகத்தை நிறுவ அரசு அனுமதி வழங்கியுள்ளது. சிக்கிம் அரசு 300 ஏக்கர் நிலத்தை 15 கோடி ரூபாய்க்கு வழங்கியுள்ளது. அதில் 265.94 ஏக்கர் நிலம் ஏற்கனவே பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களை ஒப்படைப்பது செயல்பாட்டில் உள்ளது.
அருணாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 6 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களின் திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகளுக்காக அரசு ஏற்கனவே 4371.90 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகளுடன், இந்த தேசிய தொழில் நுட்ப நிறுவனங்கள் மார்ச் 31, 2022 ஆம் தேதிக்குள் அந்தந்த நிரந்தர வளாகங்களிலிருந்து முழுமையாக செயல்படும். இந்த வளாகங்களில் ஒட்டுமொத்த மாணவர் திறன் 6320 ஆக இருக்கும்.
*****
(Release ID: 1627026)
Visitor Counter : 218