ரெயில்வே அமைச்சகம்

24.05.2020 காலை 10 மணி வரை 37 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளுடன் 2813 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியது.

நெரிசல் நிலை கணிசமாகக் குறைந்து ரயில் போக்குவரத்து வெகுவாக முன்னேற்றம் அடைந்தது.

80 சதவீதம் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்றடைந்தன.

இந்த இடங்களை நோக்கி ரயில்கள் குவிந்ததால் இயக்கத்தில் நெரிசல் ஏற்பட்டது.

மேலும், பல்வேறு சுகாதார மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளால் நிலையங்களில் பயணிகள் இறங்குவதற்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டதால், முனையங்களில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்திலும் நெருக்கடி ஏற்பட்டது.

நெரிசலைக் குறைப்பதற்காக மதுரா, ஜர்சுகுடாக்கு சில ரயில்கள் திருப்பி விடப்பட்டன.

ரயில்வே வாரிய, பிராந்திய ரயில்வே மற்றும் மண்டல அளவுகளில் இருபத்து நான்கு மணி நேர கண்காணிப்பு.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கு தொடர்ச்சியாக உணவு மற்றும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய, இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமும், ரயில்வேயும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன.

Posted On: 24 MAY 2020 5:11PM by PIB Chennai

24.05.2020 காலை 10 மணி வரை 37 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளுடன், 2813க்கும் அதிகமான ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்துக் கிளம்பிய கிட்டத்தட்ட 60 சதவீத ரயில்கள், பெரும்பாலும் உத்திர பிரதேசம் மற்றும் பீகாரை நோக்கி சென்றன. 80 சதவீதம் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் உத்திர பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றடைந்தன (உத்திர பிரதேசத்துக்கு 1310 மற்றும் பீகாருக்கு 973). உத்திர பிரதேசத்தில் லக்னோ-கோரக்பூர் பகுதியிலும், பீகாரில் பட்னாவை சுற்றியும் பெரும்பாலான சேருமிடங்கள் இருந்தன. நேற்று வரை இயக்கத்தில் இருந்த 565 ரயில்களில், 266 பீகாரை நோக்கியும், 172 உத்திர பிரதேசத்தை நோக்கியும் சென்றுக் கொண்டிருந்தன.

 

இந்த இடங்களை நோக்கி ரயில்கள் குவிந்ததால் இயக்கத்தில் நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு சுகாதார மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளால் நிலையங்களில் பயணிகள் இறங்குவதற்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டதால், முனையங்களில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்திலும் நெருக்கடி ஏற்பட்டது

 

நெரிசலைக் குறைப்பதற்காக மதுரா, ஜர்சுகுடாக்கு சில ரயில்கள் திருப்பி விடப்பட்டன. மேலும், அதிக போக்குவரத்துள்ள வழிகளில் நெரிசலைத் தடுப்பதற்காக, வழி முறைப்படுத்துதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாகமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, ரயில்வே வாரிய, பிராந்திய ரயில்வே மற்றும் மண்டல அளவுகளில் இருபத்து நான்கு மணி நேர கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் சரியான நேரத்தில் செல்வதை உறுதி செய்யுமாறு ரயில்களை ஓட்டும் பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் காரணமாக, நெரிசல் நிலைக் கணிசமாகக் குறைந்து ரயில் போக்குவரத்து வெகுவாக முன்னேற்றம் அடைந்தது.

 

கிழக்கே போகும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ரயில்கள் தாமதமானதால், உணவு விநியோகப் பணிகள் பாதிப்படைந்தன. இதைத் தொடர்ந்து, பயணிகளின் சிரமங்களைக் குறைப்பதற்காக, ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கு தொடர்ச்சியாக உணவு மற்றும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய, இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமும், ரயில்வேவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன.

 

***
 (Release ID: 1626605) Visitor Counter : 18