சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட் 19 பாதிப்பு அதிகமுள்ள நகராட்சிகளின் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் விவாதம்
Posted On:
23 MAY 2020 7:50PM by PIB Chennai
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 11 நகராட்சிப் பகுதிகளில் மிக அதிகமான கோவிட்-19 (Covid-19) தாக்கம் குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர்கள், நகர்ப்புற மேம்பாட்டுத்துறைச் செயலர்கள், நகராட்சி ஆணையர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் (National Health Mission) இயக்குநர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப்ரீதி சுதன், மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் (MoHFW) சிறப்புப் பணி அலுவலர் (OSD) ராஜேஷ் பூஷண் ஆகியோர் இன்று (மே 23) காணொளி மூலம் விவாதித்தனர். அதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் (MoHUA) கூடுதல் செயலர் கம்ரன் ரிஸ்வி பங்கேற்றார்.
மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத், தில்லி, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் 11 நகராட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவை நாட்டின் மொத்த பாதிப்பில் 70 சதவீதமாகும்.
கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை, இறப்போர் விகிதம், லட்சத்தில் எத்தனை பேருக்கு சோதனை நடத்தப்பட்டது என்ற விவரம், தொற்று உறுதி செய்யப்பட்டோர் குறித்த விவரம் ஆகியவை நிகழ்ச்சியில் விவரிக்கப்பட்டன. குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் குறுகிய காலத்தில் இரு மடங்காக உயரும் விவரம், மரண விகிதம், தேசிய அளவை விட அதிகமானோர் உறுதி செய்யப்பட்டுள்ளதன் விவரம் ஆகியவை குறித்தும் விவரிக்கப்பட்டன.
ஆபத்துக்குரிய நிலை கண்டறியப்பட்டு, தீவிர பரிசோதனைகளைக் கடைப்பிடித்து, அதன் மூலம் தடுப்பு நடவடிக்கையில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும் என்று விவாதத்தில் வலியுறுத்தப்பட்டது. அதிலும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள மக்கள் தொகை, கூட்டம், துணிவுமிக்க மருத்துவ மேலாண்மை ஆகியவை குறித்து சுட்டிக் காட்டப்பட்டது.
சில நகராட்சி பகுதிகளில் முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் மருத்துவம் செய்வதற்கும், மரண விகிதத்தைத் தடுக்கவும் உதவும் வகையில் சோதனை முறையை தீவிரமாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது.
“கோவிட்-19” (COVID-19) தொற்றினை எதிர்கொள்ள நகராட்சிகள் எடுத்துள்ள நடவடிக்கைகள், கையாண்ட சிறந்த வழிமுறைகள் ஆகியவையும் விவாதிக்கப்பட்டன.
இதுவரை 51,783 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,250 பேர் குணமடைந்துள்ளனர். இது குணமடைவோர் எண்ணிக்கை 41.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வரையில் 1,25,101 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று வரையில் 6654 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
(Release ID: 1626559)
Visitor Counter : 253