உள்துறை அமைச்சகம்

கோவிட்-19ஐ முன்னிட்டு விதிக்கப்பட்ட விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளுக்கு உள்துறை அமைச்சகம் தளர்வு. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு குடிமகன்களில்(ஓசிஐ அட்டைதாரர்கள்) குறிப்பிட்ட பிரிவினர் இந்தியா திரும்ப அனுமதி

Posted On: 22 MAY 2020 3:06PM by PIB Chennai

கோவிட்-19ஐ முன்னிட்டு விதிக்கப்பட்ட விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு குடிமகன்களில்(ஓசிஐ அட்டைதாரர்கள்) குறிப்பிட்ட பிரிவினர் இந்தியாவுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஓசிஐ அட்டைதாரர்களில் கீழ்கண்ட பிரிவினர் இந்தியா திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது:-

  • வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பிறந்த மைனர் குழந்தைகள் மற்றும் ஓசிஐ அட்டைதாரர்கள்.
  • குடும்பத்தில் இறப்பு நிகழ்வுகள் போன்ற அவசரத்துக்கு, இந்தியா வர விரும்பும் ஓசிஐ அட்டைதாரர்கள்.
  • தம்பதிகளில் ஒருவர் ஓசிஐ கார்டு வைத்திருந்து மற்றவர் இந்தியராக இருப்பவர்கள் மற்றும் இந்தியாவில் நிரந்தர வீடு வைத்திருப்பவர்கள்.
  • ஓசிஐ கார்டு வைத்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் (சட்டரீதியான மைனர்கள் அல்ல) ஆனால், அவர்களது பெற்றோர் இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் 07.05.2020 அன்று விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், மேலே குறிப்பிட்ட ஓசிஐ கார்டுகள் வைத்திருக்கும் பிரிவினரை இந்தியா அழைத்து வரும் விமானம், கப்பல், ரயில் அல்லது இதர வாகனங்களுக்குப் பொருந்தாது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் 07.05.2020 அன்று விதிக்கப்பட்ட இதர கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

Click here to see the Official Document : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/22.05.2020%20VISA%20and%20Travel%20Relaxations%20to%20come%20to%20India%20for%20certain%20OCI.jpeg(Release ID: 1626093) Visitor Counter : 24