அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 கண்டறிதலுக்காக அகப்பே சித்ர மக்னாவின் வணிக அறிமுகத்தை ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நடத்துகிறது

Posted On: 20 MAY 2020 5:24PM by PIB Chennai

கொவிட்-19- கண்டறிவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தால் (SCTIMST), கொச்சினை சேர்ந்த ஆய்வுக் கூட சோதனைக் கண்டறிதல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான அகப்பி டயாக்னஸ்டிக்ஸ் லிமிடெட்டுடன் இணைந்து உருவாக்கப்பட்ட காந்த பண்புள்ள நானோ துகள்கள் சார்ந்த ரிபோநியூக்ளிக் அமிலம் (RNA) சேகரிப்புப் பெட்டியின் வணிக அறிமுக நிகழ்ச்சி மே 21, 2020 அன்று மாலை 4.30 மணி அளவில் கொச்சினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அகப்பி டயாக்னஸ்டிக்ஸ் லிமிடெட்டுடன் இணைந்து இந்த அறிமுக நிகழ்ச்சியை, ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உயிர் மருத்துவ பிரிவில் நடத்துகிறது.

 

***
 



(Release ID: 1625697) Visitor Counter : 181