ரெயில்வே அமைச்சகம்

19 நாட்களில் 1600 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கம்: வெளிமாநில தொழிலாளர்கள் 21.5 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்

Posted On: 19 MAY 2020 9:38PM by PIB Chennai

வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிக நிம்மதி அளிக்கும் வகையில் ஷ்ரமிக் ரயில்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக  ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஷ்ரமிக் சிறப்பு ரயில்களோடு, 200 புதிய ரயில்களை ஜூன் 1, 2020 முதல் ரயில்வே இயக்கவுள்ளது. இதற்கான வழித்தடங்கள் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.

இதற்கான முன்பதிவு ஆன்லைனில் மட்டும் இன்னும் சில நாட்களில் தொடங்கும்.

இந்த ரயில்கள் ஏ.சி அல்லாதவையாக இருக்கும். இதற்கான பயணச்சீட்டுகள் எந்த ரயில் நிலையங்களிலும் விற்கப்படாது. அதனால் பயணிகள் பயணச்சீட்டுகளை வாங்க ரயில் நிலையங்களுக்கு வரக்கூடாது.

வெளிமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என இந்திய ரயில்வேத்துறை கேட்டுக் கொள்கிறது. அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கூடிய விரைவில் செல்வதை உறுதி செய்ய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வெளிமாநில தொழிலாளர்கள் தாங்கள் இருக்கம் இடத்துக்கு அருகேயுள்ள, முக்கிய வழித்தடத்துடன் இணைந்துள்ள ரயில் நிலையத்தில் இருந்து  ரயில் ஏறும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மூலம் கடந்த 19 நாட்களில் 21.5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். மே 19ம் தேதி வரை 1600 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 

***


(Release ID: 1625272)