மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கல்வித் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்த மத்திய நிதி அமைச்சர்.

Posted On: 18 MAY 2020 4:06PM by PIB Chennai

கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நன்றி தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்காக மத்திய நிதி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்த அவர், கல்வி அமைப்பை மாற்றி நாட்டிலுள்ள மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அவை வழி வகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களையும் தரமான பாடத் திட்டங்கள் சென்றடவதை "ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் தளம்" மற்றும் "ஒரே வகுப்பு ஒரே அலைவரிசை" ஆகியவை உறுதி செய்யும் என்று திரு பொக்ரியால் கூறினார். இத்தகைய நடவடிக்கைகள் கல்வியின் வீச்சையும், சமநிலையையும் அதிகப்படுத்தி, வரும் காலங்களில் மொத்த சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். திவ்யங்க் எனப்படும் மாற்றுத் திறனுள்ள குழந்தைகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதாகக் கூறிய அவர், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு புதிய முன்னுதாரணத்தை இந்த நடவடிக்கைகள் தரும் என்று தெரிவித்தார்.

 

இந்த திசையில் கீழ்கண்டவை உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார்:

 

1. டிஜிட்டல்/இணையம்/காற்றில் வரும் கல்வி உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் ஒன்று சேர்க்கும் வண்ணம் பிரதமர் மின்-கல்வி (PM e-VIDYA) என்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படும்.

 

2. தற்போதைய உலகப் பெருந்தொற்று காலத்தில், மனநலனுக்கும், உணர்ச்சிகள் நலனுக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உளவியல்-சமூக ஆதரவை அளிப்பது அவசியம். இணையதளம், கட்டணம் இல்லாத் தொலைபேசி எண், மனநல ஆலோசனை அளிப்பவர்களின் தேசிய விவரப்புத்தகம், உரையாடல் தளம் ஆகியவற்றின் மூலம் அத்தகைய ஆதரவை அளிக்க மனோதர்ப்பன் என்னும் திட்டம் தொடங்கப்படுகிறது.

 

 3. திறந்தவெளி, தொலைதூர மற்றும் இணையக் கல்வி ஒழுங்குமுறைக் கட்டமைப்பு மூலம் உயர் கல்வியில் மின்-கற்றலை அரசு விரிவுபடுத்துகிறது. சிறந்த 100 பல்கலைகழகங்கள் இணைய வகுப்புகளைத் தொடங்கும்.

 

4. கற்றல் வெளிப்பாடுகள் மீது மாணவர்கள் கவனம் செலுத்தும் வகையில், அனுபவப்பூர்வமான மற்றும் மகிழ்சிகரமான கற்றலை, திறனாய்வு சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் தொடர்புத் திறனோடு வழங்குவதை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய நெறிமுறைகளின் வேர்களோடுஉலகளாவிய திறன் தேவைகளையும் உள்ளடக்கியதாக பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். எனவே, மாணவர்களையும், வருங்கால ஆசிரியர்களையும் சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்பத் தயார்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் ஆரம்ப குழந்தைப் பருவக் கட்டத்துக்கு, தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

5. நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அடிப்படைக் கல்வி மற்றும் எண்ணறிவைக் கட்டாயம் பெறுவதை உறுதி செய்வதற்காக, தேசிய அடிப்படைக் கல்வி மற்றும் எண்ணறிவு இயக்கம் அறிமுகப்படுத்தப்படும். மூன்று முதல் 11 வயது வரை உள்ள சுமார் நான்கு கோடி குழந்தைகளின் கல்வித் தேவைகளை இந்த இயக்கம் பூர்த்தி செய்யும்.(Release ID: 1624891) Visitor Counter : 135