உள்துறை அமைச்சகம்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர் குறித்த தேசிய தகவல் அமைப்பு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலங்களிடையே எளிதாக சென்று வருவதற்கு உதவி செய்திடும்

Posted On: 16 MAY 2020 9:05PM by PIB Chennai

பேருந்துகளின் மூலமும் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களின் மூலமும் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய உதவும் வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நகர்வு குறித்த தகவல்களைப் பதிவு செய்யவும், மாநிலங்களில் சிக்கித் தவித்து வரும் அவர்கள் எளிதாக இடம் பெயரவும் உதவும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புலம்பெயர் தொழிலாளர் குறித்த தேசிய இணைய வழி பதிவேட்டை உருவாக்கியுள்ளது.

இந்த இணைய தளம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தகவல்களை மைய அளவில் சேகரிக்கும் என்பதோடு அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எளிதாக செல்வதற்கு உதவிடும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கும் வழிவகுக்கும். கொரோனா தொடர்பான ஒட்டுமொத்த பிரதிபலிப்பு பணிகளுக்கு உதவி செய்வது, அவர்களின் தொடர்புகள் பற்றிய விவரங்களை சேகரிப்பது போன்ற கூடுதலான வசதிகளைக் கொண்டதாகவும் இந்த இணைய தளம் அமைந்துள்ளது.

இவ்வாறு புலம் பெயரும் தொழிலாளர்கள் குறித்த பெயர், வயது, கைபேசி எண், பயணம் செய்யத் தொடங்கிய மாவட்டம், சென்று சேரவுள்ள மாவட்டம், பயணம் செய்த தேதி போன்ற முக்கிய தகவல்கள் தரமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே மாநிலங்கள் இது போன்ற தகவல்களை சேகரித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கிருந்து எத்தனை பேர் இவ்வாறு வெளியே செல்கின்றனர்? எவ்வளவு பேர் தீர்மானித்த மாநிலங்களை சென்று அடைந்துள்ளனர்? ஆகிய விவரங்களை இதன் மூலம் மாநிலங்களால் காட்சிப்படுத்திக் கொள்ள முடியும். அவர்களின் கைபேசி எண்களின் மூலம் அவர்களது தொடர்புகளை கண்டறியவும், கொரோனா காலத்தில் அவர்களின் நகர்வுகளைக் கண்காணிக்கவும் முடியும்.

மாநிலங்களுக்கு அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்.

 

*****



(Release ID: 1624737) Visitor Counter : 404