ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தாமாக முன்வந்து பங்கேற்பு
Posted On:
14 MAY 2020 6:07PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று கட்டுப்படுத்துதல், அடையாளம் காணுதல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பாக தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் (என் ஐ பி இ ஆர்) பல்வேறு பிரிவுகள் ஏராளமான பன்முக ஆராய்ச்சி திட்டங்களை ஒப்புதலுக்காக தொடர்புடைய நிறுவனங்களுக்கு சமர்ப்பித்துள்ளன. இந்த திட்டங்களின் முக்கிய கருப்பொருள்கள் பின் வருமாறு, கோவிட்-19 வைரஸை குறிவைக்கும் வண்ணம் புரத வடிவமைப்பு (என் ஐ பி இ ஆர் - மொஹாலி), உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்து- தரவு தளத்தை (என் ஐ பி இ ஆர் மொஹாலி மற்றும் ரேபரேலி) பயன்படுத்தி வழிகாட்டப்பட்ட மருந்து – மறு பயன்பாடு, வைரஸ் தடுப்பு மருந்து (என் ஐ பி இ ஆர் மொஹாலி ) மாற்றத்திற்கு மருந்து சார்பு பகுப்பாய்வு, நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, சுவாசத்தை எளிதாக்க முகரும் மருந்து போன்ற அடிப்படை துணை-சிகிச்சை (என் ஐ பி இ ஆர் ஹைதராபாத்), கோவிட் - 19 விரைவான சோதனைக்காக (என் ஐ பி இ ஆர் - அஹமதாபாத்) குவாண்டம்-டாட் அடிப்படையிலான மற்றும் கடத்துத்திறன் சார்ந்த பயோசென்சர் மேம்பாடு, மற்றும் கோவிட் -19 ன் போது பக்கவாதம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவது பற்றிய ஒரு சுவாரஸ்யமான ஆய்வு. மேலும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மூலிகைகளை பயன்படுத்தி புதிய நோய் எதிர்ப்பு சக்திக்கான சூத்திரத்தை உருவாக்குவதில் ஐ.ஐ.டி மற்றும் தொழில்துறை நுறுவனத்துடன் இணைந்த ஒரு மெகா திட்டத்தையும் என் ஐ பி இ ஆர் –ரேபரேலி) தொடங்கியுள்ளது. என் ஐ பி இ ஆர் கொல்கத்தா, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின், மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஒரு தனியார் உற்பத்தியாளருடன் இணைந்து செலவு குறைந்த உள்நாட்டு ஐ.சி.யூ வென்டிலேட்டர் ஒன்றை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
(Release ID: 1624054)
Visitor Counter : 231