உள்துறை அமைச்சகம்
ஒரே சபதம், ஒரே லட்சியம் - சுய-சார்பான இந்தியா: திரு. அமித் ஷா
நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுத காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும்
Posted On:
13 MAY 2020 2:39PM by PIB Chennai
நாட்டை சுய-சார்போடு திகழச் செய்யவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகத்தின் தலைமையாக இந்தியாவை ஆக்கும் வழிகாட்டும் விளக்கு என்று அந்த வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சர், திரு. அமித் ஷா வர்ணித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று, நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன் மொத்தக் கொள்முதல் மதிப்பு சுமார் ரூ. 2,800 கோடியாக இருக்கும். 10 இலட்சம்மத்திய ஆயுத காவல் படையினரின் 50 இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் இதன் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவர்.
நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்த உள்துறை அமைச்சர், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை நீங்கள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி, அடுத்தவர்களையும் இதைச் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும். இது பின் தங்கும் நேரமல்ல, மாறாக நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் நேரம்," என்றார்.
திரு. ஷாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை (சுதேசி) மட்டுமே பயன்படுத்த சபதம் எடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு தன்னிறைவு அடைந்து விடும்.
"உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவை சுய-சார்பு நிறைந்த நாடாக ஆக்கும் பயணத்தில் நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்," என்றுநாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
***
(Release ID: 1623581)
Visitor Counter : 234
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam