நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ரேஷன் கார்டுடன் ஆதார் இணைப்பு குறித்த விளக்கம்

Posted On: 11 MAY 2020 6:43PM by PIB Chennai

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால், அவை ரத்தாகும் என்ற செய்தி செய்தித்தாள்கள் சிலவற்றில் வெளியாகி இருந்தது.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் 07/02/2020 (நேரத்துக்கு ஏற்ற திருத்தங்கள்) வெளியிடப்பட்ட ஆதார் குறித்த அறிவிப்பாணையில், அனைத்து ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 30/09/2020 வரையில் இத்துறையால் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் உண்மையான எந்தப் பயனாளிகளையோ / வீடுகளுக்கு அவர்களுக்கான உணவு தானியங்கள் ஒதுக்கீட்டையோ அல்லது அல்லது அவர்களின் பெயர்களையோ / ரேஷன் கார்டுகளையோ, ஆதார் எண் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீக்கக்கூடாது என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் சீரிய முயற்சியில் தற்போது வரை 90 சதவீத, அதாவது 23.5 கோடி ரேஷன் கார்டுகளுடன் ஏற்கனவே ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது குறைந்தபட்சம் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்). 80 கோடி பயனாளிகளில் 85 சதவீதம் பேர், தங்களுடைய ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைத்துள்ளனர்.

 



(Release ID: 1623272) Visitor Counter : 101