புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் செயலராக திரு.இந்து சேகர் சதுர்வேதி (ஐஏஎஸ்) பொறுப்பேற்பு.

प्रविष्टि तिथि: 11 MAY 2020 3:24PM by PIB Chennai

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் புதிய செயலராக, திரு. இந்து சேகர் சதுர்வேதி (ஐஏஎஸ்) இன்று பொறுப்பேற்றார். 1987 ஆம் ஆண்டில்எஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. சதுர்வேதி ஜார்க்கண்ட் மாநிலப் பிரிவைச் சேர்ந்தவர். இந்த அமைச்சகத்தின் செயலரா இருந்த திரு.ஆனந்த் குமார், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலராக பொறுப்பேற்றதையடுத்து திரு.சதுர்வேதி இப்போது இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

 

முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, திரு.துர்வேதி அமைச்சகத்தின் மூத்த

அதிகாரிகளை சந்தித்து, அமைச்சகத்தின் முன்னாள் உள்ள பணிகள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

 

இதற்கு முன்னர் திரு.சதுர்வேதி ஜார்கண்ட் அரசின் கூடுதல் தலைமை செயலராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள், பருவ நிலை மாற்றம் ஆகிய துறைகளுக்கான அமைச்சகத்தின், பருவநிலை மாற்றத் துறையின் கூடுதல் செயலராகவும் பணியாற்றி வந்தார்.
 


(रिलीज़ आईडी: 1622989) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Odia , Telugu , Malayalam