அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் தருவதன் மீது கவனம் செலுத்தும் விதத்தில் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படவுள்ளது.
விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், தூதர்கள், உலக சுகாதார நிறுவன அலுவலர்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேசத் தொழில்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றூம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை இந்த மாநாடு ஒன்றிணைக்கும்.

Posted On: 10 MAY 2020 4:12PM by PIB Chennai

ரீஸ்டார்ட் (RESTART) என்னும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மொழிபெயர்ப்புகள் மூலம் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டுவது தொடர்பான உயர் மட்ட டிஜிட்டல் மாநாடு, அறிவியல்  தொழில்நுட்பத் துறையின் சட்டப்பூர்வ அமைப்பான தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவற்றால்  தேசியத் தொழில்நுட்ப தினத்தைக் கொண்டாடும் விதமாக 11 மே, 2020 (திங்கள்) அன்று நடத்தப்படும்.

மத்திய அறிவியல்  தொழில்நுட்பம், சுகாதார மற்றும் குடும்ப நலம் மற்றும், புவி அறிவியல் அமைச்சர், டாக்டர். ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கிதேசிய தொழில்நுட்ப தின உரையாற்றுவார்.

பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்ட விரிவான செயல் திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை மனதில் கொண்டு, இது தொடர்பான தொழில்நுட்பத் தீர்வுகள் மீது கவனம் செலுத்தும் விதமாக தேசிய தொழில்நுட்ப தினத்தை தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் கொண்டாடுகிறது. மருத்துவத்  தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் கொவிட்-19க்குப் பிறகான காலத்துக்கு இந்தியாவைத் தயார்படுத்தும் தயாரிப்புகள் ஆகியவை இந்த தொழில்நுட்பங்களில் அடங்கும்.

டிஜிட்டல் மாநாட்டோடு, தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தின் ஆதரவு பெற்றுள்ள தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ள நிறுவனங்களோடு இணைந்து ஒரு மெய்நிகர் கண்காட்சியும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

மாநாட்டிலும், கண்காட்சியிலும் பங்கு பெற ஆர்வமுள்ளவர்கள் https://www.ciidigitalevents.in/SignUp.aspx?EventId=E000000003 என்னும் சுட்டியைப் பயன்படுத்தி முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம்.(Release ID: 1622726) Visitor Counter : 30