பாதுகாப்பு அமைச்சகம்
விமானப்படை, கடற்படை, கடலோர காவல் படை மற்றும் பிற படைகளின் விமானதளங்களுக்கான கட்டமைப்பு நவீனமயமாக்கல்
प्रविष्टि तिथि:
08 MAY 2020 6:25PM by PIB Chennai
இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படைக்கான 37 விமான தளங்களின் கட்டமைப்பை நவீனமயமாக்க டாடா பவர் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஓப்பந்தத்தின் பரிந்துரைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.
இந்திய விமானப்படையின் 30 விமானதளங்களை நவீனமயமாக்குவது உள்ளிட்ட விமான தள கட்டமைப்புகள் மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இரண்டாவது கட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டத்தின்கீழ் விமான தளங்கள் நவீனப்படுத்தப்பட்டதன் மூலம், ராணுவம் மற்றும் பொது பயன்பாட்டாளர்கள் அதகளவில் பயனடைந்து வருகின்றனர்.
(रिलीज़ आईडी: 1622424)
आगंतुक पटल : 232