பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ட்ரைஃபெட்-டும், ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பும் இணைந்து பழங்குடி கைவினைக் கலைஞர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்க உள்ளன

Posted On: 08 MAY 2020 5:47PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ட்ரைஃபெட் அமைப்பும், ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பும் இணைந்து பழங்குடியினருக்கான தொழில்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளன. ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பு, தேவைப்படும் பழங்குடி கைவினை கலைஞர்களுக்கு, ரேசன் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை இலவசமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள 9,409 கலைஞர்களுக்கு இவற்றை விநியோகிக்க ட்ரைஃபெட் ஏற்பாடு செய்துள்ளது.


(Release ID: 1622208) Visitor Counter : 201