மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாட்டில் ஆராய்ச்சியை அதிகரிப்பதற்காக பிரதமரின் ஆய்வு உதவித்தொகைத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்

Posted On: 07 MAY 2020 4:14PM by PIB Chennai


மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் நாட்டில் ஆராய்ச்சியை அதிகரிக்க பிரதமரின் ஆய்வு உதவித்தொகைத் திட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தார், திருத்தங்களுக்குப் பிறகு, இப்போது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனம் / பல்கலைக்கழக மாணவர்களுக்கும் (IISc / IITs / NITs / IISERs / IIEST / CF IIITs தவிர), கேட் மதிப்பெண்ணின் தேவை 750 இலிருந்து 650, மற்றும் CGPA 8 அல்லது அதற்கு சமமானதாக குறைக்கப்படுகிறது.

 

மேலும், இப்போது ஒரு நேரடி நுழைவு மற்றும் பிற்சேர்க்கை (Lateral entry) என இரண்டு வழிமுறை இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிற்சேர்க்கை வழங்கும் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் படிப்பு (Ph.d) படிக்கும் மாணவர்கள் (12 மாதங்கள் அல்லது 24 மாதங்கள் சில தேவைகளுக்கு ஏற்ப பூர்த்தி செய்யப்பட வேண்டும்) புதிய வழிகாட்டுதல்களின் படி பிரதமரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்தில் (Prime Minister's Research Fellowship - PMRF) இணைவதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதன் சிறப்பம்சமாக தேசிய நிறுவனக் கட்டமைப்புத் தரவரிசைப்படி (ஒட்டுமொத்தமாக) முதல் 25 கல்வி நிறுவனங்களில் இடம்பெறக் கூடிய  தேசிய தொழில் நுட்ப நிறுவனங்கள் PMRF நிதி பெறும் நிறுவனமாக மாறக்கூடும் என்று திரு. போக்ரியால்  தெரிவித்தார். இந்த மாற்றங்கள் பிரதமரின் ஆய்வு உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அதிகமான மாணவர்கள் நன்மைகளைப் பெற உதவும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

ஆராய்ச்சியை அதிகரிப்பதற்காக அமைச்சகத்தில் "ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புப் பிரிவு" என்ற பெயரில் ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த பிரிவுக்கு ஒரு இயக்குர் தலைமை தாங்குவார், அவர் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் வரும் பல்வேறு நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பார்.

 

*************


 


(Release ID: 1621904) Visitor Counter : 250